சர்வதேச கிரிக்கெட்டுக்கு அதிக அம்பயர்களை உருவாக்கி கொடுத்த நாடுகள் எவை – டாப் 7 பட்டியல் இதோ

INDvsAUS
- Advertisement -

எந்த வகையான கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் அதில் வெற்றி பெறுவதற்கு இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தங்களது முழு மூச்சை கொடுத்து ஆக்ரோசமாக மோதிக் கொள்வார்கள். அதனால் ஒரு போட்டியின் பல சமயங்களில் பரபரப்பான தருணங்கள் ஏற்படும் போது அதை இரு அணிகளுக்கும் சாதகம் இல்லாமல் நேர்மையுடன் நடுநிலை தன்மையுடன் நின்று சமமாக வழங்க வேண்டியது போட்டியை கண்காணிக்கும் நடுவரின் இன்றியமையாத கடமையாகும். அதுபோன்ற சரியான தீர்வுகளை வழங்கும் போது அதற்கு ஏற்றார்போல் கடுமையான சவால்களையும் நடுவர்களாக செயல்படுபவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக எல்பிடபிள்யூ போன்ற தருணங்களில் ஒருசில வினாடிகளில் துல்லியமான தீர்ப்பை கணித்து உடனடியாக வழங்க வேண்டியது கடினமான ஒன்றாகும். அதற்காக அடிப்படை விதி முறைகளை தெரிந்து கொள்வதற்கு ஸ்பெஷல் வகுப்புகளுக்கு சென்று அனைத்தையும் கற்றுக் கொண்டாலும் களத்தில் செயல்படும்போது கணப்பொழுதில் சரியான முடிவுகளை கொடுக்க வேண்டும் என்பது உண்மையாகவே மனிதர்கள் வடிவில் நிற்கும் நடுவர்களுக்கு எளிதானது கிடையாது.

- Advertisement -

அதுபோக போட்டியில் விளையாடும் வீரர்கள் கூட பேட்டிங் செய்யும் இன்னிங்சில் ஓய்வெடுப்பதற்காக நேரம் கிடைக்கும். ஆனால் நடுவர்களாக செயல்படுவார்கள் போட்டி முழுவதும் சலிக்காமல் நின்று சோர்வடையாமல் சரியான தீர்ப்புகளை வழங்கிக் கொண்டே இருக்க வேண்டும். இதற்கிடையே இரு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் எப்போதாவது வாய் வார்த்தைகளால் சண்டைக்கு செய்துகொண்டால் உள்ளே நுழைந்து அவர்களை சமாதானப்படுத்தி போட்டியை அமைதியான முறையில் நடத்த வேண்டியதும் அவர்களின் கடமையாகும்.

டாப் 6 நாடுகள்:
அதானாலேயே கிரிக்கெட் விளையாட நினைக்கும் பெரும்பாலானவர்கள் நடுவர்களாக செயல்பட விரும்பமாட்டார்கள். அதேப்போல் கிரிக்கெட் விளையாடும் அனைத்து வீரர்களும் நடுவர்களாக செயல்பட முடியாது. இருப்பினும் ஒருசில வீரர்கள் கிரிக்கெட்டில் விளையாடிய பின்பு அதை விட்டுப் பிரிய முடியாமல் நடுவர்களாக செயல் படுவதுமுண்டு. மேலும் கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாட்டிலும் ஏதோ ஒரு துறையின் அதிக ஆர்வம் இருப்பதால் தான் அது சம்பந்தமாக நிறைய வீரர்கள் உருவெடுப்பார்கள்.

- Advertisement -

எடுத்துக்காட்டாக சச்சின் டெண்டுல்கரை போல் வர வேண்டுமென்று நினைப்பததாலேயே பவுலர்களை விட இந்தியா நிறைய பேட்ஸ்மேன்களை உருவாக்கி வருகிறது. அதேபோல் வாசிம் அக்ரம், வகார் யூனிஸ் போன்றவர்களை பார்த்து அவர்களைப் போல் வரவேண்டுமென்று வளர்வதால் பேட்ஸ்மேன்களை விட பாகிஸ்தான் அதிக பவுலர்களை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அதிக நடுவர்களை உருவாக்கிக் கொடுத்த நாடுகளைப் பற்றி பார்ப்போம்:

7. பாகிஸ்தான் 52: தரமான வேகப்பந்து வீச்சாளர்களை பஞ்சமில்லாமல் உருவாக்கிவரும் பாகிஸ்தானிலிருந்து வரலாற்றில் இதுவரை 52 நடுவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் செயல்பட்டுள்ளனர்.

- Advertisement -

அதில் 2 பேர் 100க்கும் மேற்பட்ட போட்டிகளில் நடுவர்களாக செயல்பட்டுள்ளனர். குறிப்பாக ரசிகர்களிடம் மிகவும் புகழ்பெற்ற அலீம் தார் உலகிலேயே அதிக போட்டிகளில் நடுவராக செயல்பட்டவராக உலக சாதனை படைத்துள்ளார்.

6. நியூஸிலாந்து 64: சிறிய நாடாக இருந்தாலும் அனைத்து துறைகளிலும் கால் பதிக்கக் கூடிய நியூசிலாந்தில் இருந்து வரலாற்றில் 64 பேர் சர்வதேச போட்டிகளில் நடுவராக செயல்பட்டுள்ளனர். அதில் 4 நடுவர்கள் 100க்கும் மேற்பட்ட போட்டிகளில் செயல்பட்டுள்ளனர். அந்நாட்டை சேர்ந்த பில்லி பௌடன் உலகிலேயே ரசிகர்களை மகிழ்வித்த மிகச் சிறந்த நடுவராக போற்றப்படுகிறார். அந்நாட்டில் இருந்து அவர் அதிகபட்சமாக 308 போட்டிகளில் நடுவராக செயல்பட்டுள்ளார்.

- Advertisement -

5. தென் ஆப்பிரிக்கா 65: தென் ஆப்பிரிக்காவில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 65 பேர் நடுவர்களாக செயல்பட்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக 4 நடுவர்கள் 100க்கும் மேற்பட்ட போட்டிகளில் செயல்பட்டுள்ளார்கள். அதிகபட்சமாக ரூடி கோர்ட்சின் 331 போட்டிகளில் நடுவராக செயல்பட்டுள்ளார்.

4. வெஸ்ட் இண்டீஸ் 69: கரீபியன் நாடுகளான வெஸ்ட் இண்டீசிலிருந்து வரலாற்றில் 69 பேர் அம்பயர்களாக செயல்பட்டுள்ளனர். அதில் 3 பேர் 100க்கும் மேற்பட்ட போட்டிகளில் நடுவர்களாக செயல்பட்டுள்ளார். குறிப்பாக இந்திய ரசிகர்கள் அதிகம் விரும்பாத ஸ்டீவ் பக்னர் 309 போட்டிகளில் செயல்பட்டுள்ளார்.

3. ஆஸ்திரேலியா 106: கிரிக்கெட்டில் எப்போதுமே முதலிடத்தில் இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஆஸ்திரேலியாவிலிருந்து வரலாற்றில் 106 பேர் நடுவர்களாக சர்வதேச போட்டிகளில் செயல்பட்டுள்ளனர்.

அதில் உலகிலேயே அதிகபட்சமாக 9 பேர் 100க்கும் மேற்பட்ட போட்டிகளில் செயல்பட்டுள்ளனர். குறிப்பாக துல்லியம் நேர்மை தரம் என அனைத்துக்கும் சான்றாக ரசிகர்களின் மனதில் என்றும் நிற்கும் சைமன் டௌஃபல் அதிகபட்சமாக 282 போட்டிகளில் அம்பயராக செயல்பட்டுள்ளார்.

2. இங்கிலாந்து 121: கிரிக்கெட்டை கண்டுபிடித்து அடிப்படை விதிமுறைகளை உருவாக்கிய இங்கிலாந்திலிருந்து சர்வதேச போட்டிகளில் 121 பேர் நடுவர்களாக செயல்பட்டுள்ளனர். அதிகபட்சமாக 7 பேர் 100க்கும் மேற்பட்ட போட்டிகளில் செயல்பட்டுள்ளனர். குறிப்பாக டேவிட் செபார்ட் 204 போட்டிகளில் அதிக பட்சமாக நடுவராக செயல் பட்டுள்ளனர்.

1. இந்தியா 123: உலகின் இதர நாடுகளை காட்டிலும் மதமாக பார்க்கும் அளவுக்கு இந்தியாவில்தான் கிரிக்கெட் மிகவும் பிரபலமான விளையாட்டாக மாறியுள்ளது. சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே உள்ளிட்ட எத்தனையோ தரமான பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களை உருவாக்கிய இந்தியா சர்வதேச கிரிக்கெட்டுக்கு அதிகபட்சமாக 123 நடுவர்களையும் பரிசளித்துள்ளது.

அதில் அதிகபட்சமாக 2 பேர் மட்டும் 100+ போட்டிகளில் செயல்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் வீரர் ஸ்ரீனிவாசன் வெங்கட்ராகவன் கிரிக்கெட்டை விளையாடி ஓய்வுக்குப் பின் நடுவராக 125 போட்டிகளில் செயல்பட்டு இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Advertisement