டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 1 – 11 பேட்டிங் ஆர்டரில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களின் பட்டியல்

- Advertisement -

இன்று என்னதான் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் வந்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்து மிகவும் புகழ்பெற்ற கிரிக்கெட் போட்டிகளாக கொடிகட்டிப் பறந்தாலும் நூற்றாண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அன்றும் இன்றும் உள்ள மவுசு எப்போதுமே குறையாது எனலாம். ஏனெனில் இந்த வகையான போட்டி தான் ஒரு வீரரின் உண்மையான திறமையையும் பொறுமையையும் மன தைரியத்தையும் சோதிக்கும் கிரிக்கெட்டாக இருக்கிறது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் வெள்ளை பந்துகளால் விளையாடப்படும் டி20 கிரிக்கெட்டில் 50 பந்துகளில் 100 ரன்களை அடிப்பது எளிதான காரியம்.

Virender Sehwag Rahul Dravid IND vs SL

- Advertisement -

ஆனால் சிறப்பு வாய்ந்த சிவப்பு பந்துகளால் விளையாடப்படும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 பந்துகளை எதிர்கொண்டு 100 ரன்களை அடிப்பது கடினமாகும். அதனாலேயே அதற்கு “டெஸ்ட்” என பெயரை வைத்துள்ள வல்லுனர்கள் அதில் சிறப்பாக செயல்படும் பேட்ஸ்மேன்களை தான் உலகத்தரம் வாய்ந்தவர்களாக போற்றுகிறார்கள். வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் பேட்டிங் வரிசையை மாற்றிக்கொண்டு வீரர்கள் களமிறங்குவார்கள். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 90% ஆரம்பத்திலேயே ஒரு பேட்ஸ்மேனின் இடத்தை அணி நிர்வாகம் தீர்மானித்து விடும்.

உலகின் 11 பேட்ஸ்மேன்கள்:
ஏனெனில் டெஸ்ட் போட்டிகளில் எல்லா இடங்களிலும் அனைவராலும் களமிறங்கி சிறப்பாக ரன்களை சேர்க்க முடியாது. ஓப்பனிங் முதல் 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 என பேட்டிங் வரிசையில் உள்ள ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றார் போல் பேட்டிங் செய்து ரன்களை குவிக்க வேண்டியது அந்த இடத்தில் களமிறங்கும் பேட்ஸ்மேன்களின் தலையாய கடமையாகும். அதில் ஒவ்வொரு இடத்திலும் களமிறங்கும் பேட்ஸ்மேன்களுக்கு வித்தியாசமான சவால்கள் காத்திருக்கும்.

Kapil

எடுத்துக்காட்டாக ஓப்பனிங்கில் புதிய ஸ்விங் பந்துகளை எதிர்கொள்ள வேண்டிய பேட்ஸ்மேன்கள் மிடில் ஆர்டரில் சரிவை சந்தித்தால் மேலும் சரிய விடாமல் நங்கூரத்தை போட வேண்டும். அதுவே 9, 10-வது இடங்களில் களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் தில்லாக கணிசமான ரன்களை சேர்ப்பது வெற்றிக்கு வித்திடும். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒவ்வொரு இடத்திலும் அதிக ரன் குவித்த பேட்ஸ்மேன்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. சுனில் கவாஸ்கர் 8511: எந்த ஒரு இன்னிங்ஸிலும் 2 பேட்ஸ்மென்கள் சேர்ந்து துவக்குவார்கள் என்பதால் அவர்களை தொடக்க வீரர்கள் என்று அழைக்கிறோம். இருப்பினும் போட்டியின் முதல் பந்தை யார் எதிர் கொள்கிறார்களோ அவர் முதல் பேட்ஸ்மேன் ஆவார்.

gavaskar 1

அந்த வகையில் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் மொத்தமாக எடுத்த 10122 ரன்களில் 8511 ரன்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த முதல் ஓபனிங் பேட்ஸ்மேனாக சாதனை எடுத்துள்ளார். அவருக்குப்பின் ஷேவாக் போன்ற ஜாம்பவான்கள் வந்தபோதும் கூட இன்னும் அவர் முதலிடத்தில் இருப்பது அவரின் தரமாகும்.

- Advertisement -

2. மேத்தியூ ஹெய்டன் 7351: 3 வகையான கிரிக்கெட்டிலும் மிரட்டலான ஓபனிங் பேட்ஸ்மேனாக வலம் வந்த ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹெய்டன் மொத்தமாக எடுத்த 8625 ரன்களில் 7351 ரன்களை 2-வது ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி எடுத்து இந்த வரலாற்று பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

sanga

3. குமார் சங்ககாரா 11,679: ஜாம்பவான் சச்சினுக்கு பின் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள இலங்கையின் ஜாம்பவான் குமார் சங்ககாரா மொத்தமாக எடுத்த 12,400 ரன்களில் 11,679 ரன்களை ஒன் டவுன் எனப்படும் 3-வது இடத்தில் களமிறங்கி எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 3-வது இடத்தில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக அசத்தியுள்ளார்.

- Advertisement -

4. சச்சின் டெண்டுல்கர் 13,492: நான் இல்லாத சாதனைப் பட்டியலா என்பது போல் கிரிக்கட்டில் உள்ள அத்தனை பேட்டிங் சாதனைப் பட்டியலிலும் காலத்தால் அழிக்க முடியாத அளவுக்கு தனது பெயரை ஆழமாக பொறித்துள்ள இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மொத்தம் எடுத்துள்ள 15,921 ரன்களில் 13,492 ரன்கள் 4-வது இடத்தில் களமிறங்கி எடுத்ததாகும்.

Sachin 1

கிரிக்கெட் கடவுளை நான் நேரில் பார்த்துள்ளேன், அவர் இந்தியாவுக்காக 4-வது இடத்தில் பேட்டிங் செய்கிறார் என்று ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் ஒரு முறை அவரை புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

5. சிவ்நரேன்சந்தர் பால் 6883: வித்தியாசமாக நின்று தன்னை விட உயரமான கிளன் மெக்ராத் போன்ற பவுலர்களையும் தெறிக்கவிட்ட இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5-வது இடத்தில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக மொத்தம் எடுத்த 11867 ரன்களில் 6883 ரன்களை அந்த இடத்தில் களமிறங்கி எடுத்து சாதனை படைத்துள்ளார்.

Steve-Waugh

6. ஸ்டீவ் வாக் 3165: ஒட்டுமொத்த உலகமே கண்ட மகத்தான கேப்டன்களில் ஒருவராக பார்க்கப்படும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஸ்டீவ் வாக் எடுத்த 10927 ரன்களில் 3165 ரன்களை 6-வது இடத்தில் களமிறங்கி எடுத்து வரலாற்றில் 6-வது இடத்தில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார்.

7. ஆடம் கில்கிறிஸ்ட் 3948: கிரிக்கெட் கண்ட முதல் மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர் மொத்தமாக எடுத்த 5570 ரன்களில் 3948 ரன்களை லோயர் மிடில் ஆர்டரில் எடுத்து 7-வது இடத்தில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக இந்த வரலாற்று பட்டியலில் இடம் பிடிக்கிறார்.

vettori

8. டேனியல் வெட்டோரி 2227: பொதுவாகவே 8வது இடத்திலிருந்து பவுலர்கள் களமிறங்குவார்கள் என்பதால் அவர்களை டெயில் எண்டர்கள் என்று அழைப்பதுண்டு. அந்த வகையில் நியூசிலாந்தின் முன்னாள் வீரர் டேனியல் வெட்டோரி எடுத்த 4531 ரன்களில் 2227 ரன்களை 8-வது பேட்ஸ்மேனாக களமிறங்கி எடுத்து வரலாற்றில் 8-வது இடத்தில் அதிக ரன்களை எடுத்தவராக சாதனை படைத்துள்ளார்.

9. ஸ்டுவர்ட் ப்ராட் 1319: இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான இவர் 9-வது இடத்தில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக 1319 ரன்களுடன் சாதனை படைத்துள்ளார்.

10. ஸ்டூவர்ட் ப்ராட் 786: இந்தப் பட்டியலில் 2 முறை இடம் பிடிக்கும் ஒரே பேட்ஸ்மேனாக மீண்டும் 786 ரன்களை எடுத்துள்ள ஸ்டூவர்ட் பிராட் 10-வது இடத்தில் அதிக ரன்களை எடுத்த பேட்ஸ்மேனாகவும் சாதனை படைத்துள்ளார்.

Boult 1

11. ட்ரெண்ட் போல்ட் 640: எப்போதுமே வந்து செல்லக்கூடிய பேட்ஸ்மேனாக கருதப்படும் 11-வது இடத்தில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரனை சமீபத்தில் முந்திய நியூசிலாந்தின் ட்ரென்ட் போல்ட் 640 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

Advertisement