ஐபிஎல் வரலாற்றில் ஒவ்வொரு அணிக்காகவும் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்களின் – லிஸ்ட் இதோ

IPL
- Advertisement -

இந்தியாவில் நடைபெறவுள்ள 15 ஆவது ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இவ்வருடம் 2 புதிய அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதால் 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் இந்த வருடம் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. இந்த தொடரானது மார்ச் மாதம் இறுதியில் துவங்கவுள்ளதாக பி.சி.சி.ஐ ஏற்கனவே அறிவித்தது.

ipl

- Advertisement -

இதன் காரணமாக அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு கடந்த 2018க்கு பின் முதல் முறையாக மெகா அளவில் நடைபெறும் இந்த ஏலத்தின் முதல் நாள் பிப்ரவரி 12ஆம் தேதி முற்பகல் 12 மணிக்கு துவங்க உள்ளது. இதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் மொபைல் ஆப் வாயிலாக ரசிகர்கள் நேரடியாக பார்க்க முடியும்.

அணிகளின் நட்சத்திரங்கள்:
இந்த வருடம் டேவிட் வார்னர் போன்ற சில வெளிநாட்டு நட்சத்திர வீரர்களும் ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிசான் போன்ற இந்திய வீரர்களும் பெரிய தொகைக்கு ஏலம் போவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் கடந்த வாரம் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று முடிந்த ஐசிசி அண்டர்-19 சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்த கேப்டன் யாஷ் துள், ராஜ் பாவா போன்ற வீரர்களை வாங்க அனைத்து அணிகளும் போட்டிப்போடும் என நம்பப்படுகிறது.

Rohith-2

இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் ஆரம்பம் முதல் தற்போது வரை மும்பை, சென்னை உள்ளிட்ட 8 அணிகள் விளையாடி வருகின்றன. எனவே வரலாற்றில் இந்த 8 அணிகளுக்காக மிகவும் அதிகபட்ச தொகைக்கு ஒப்பந்தமான வீரர்கள் பற்றிய பட்டியலை இப்போது பார்ப்போம்.

- Advertisement -

1. மும்பை இந்தியன்ஸ் : 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்று ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி ஜொலிக்கிறது. அந்த அணி இந்த அளவுக்கு வெற்றிகரமாக மின்னுவதற்கு காரணம் அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Ganguly-ipl
IPL MI

அப்படிபட்ட தரமான ரோகித் சர்மாவை கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 9.20 கோடிகளுக்கு விளையாட முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்தது. அதன்பின் 2013 முதல் கேப்டனாக பொறுப்பேற்று அந்த அணியை வழிநடத்தி வரும் ரோகித் சர்மா 5 கோப்பைகளை வென்று கொடுத்ததுடன் வரலாற்றில் மும்பை அணிக்காக அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

- Advertisement -

2. சென்னை சூப்பர் கிங்ஸ் : மும்பைக்கு பின் 4 கோப்பைகளை வென்று ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 2வது வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் திகழ்கிறது. அந்த அணி இந்த அளவுக்கு வானளவு புகழை பெறுவதற்கு கேப்டன் எம்எஸ் தோனி மிக முக்கியமானவர் என்பதில் சந்தேகமே இல்லை.

jadeja

அவரை கடந்த 2008ஆம் ஆண்டு 9.5 கோடிகளுக்கு சென்னை அணி நிர்வாகம் வாங்கியது. இருப்பினும் கூட கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் 12.72 கோடிகளுக்கு எடுக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா தான் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் ஆவார்.

- Advertisement -

3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : கடந்த 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் தொடரில் 3வது வெற்றிகரமான அணியாக விளங்குகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பட் கமின்ஸ் கொல்கத்தா அணிக்காக முதல் முறையாக ரூபாய் 15.50 கோடிகளுக்கு விளையாட ஒப்பந்தம் ஆனார். அதன் வாயிலாக கொல்கத்தா அணிக்காக அதிக சம்பளத்தில் விளையாடிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

cummins

4. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: கிறிஸ் கெயில், ஏபி டிவிலியர்ஸ், விராட் கோலி, கேஎல் ராகுல் என பல நட்சத்திர வீரர்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி உள்ளார்கள். ஆனால் கடந்த 2021ஆம் ஆண்டு நியூசிலாந்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் கைல் ஜேமிசனை வரலாற்றிலேயே அதிகபட்சமாக ரூபாய் 15 கோடிகளுக்கு பெங்களூரு அணி நிர்வாகம் வாங்கியுள்ளது.

5. டெல்லி கேபிட்டல்ஸ் : முதலில் டெல்லி டேர்டெவில்ஸ் என இருந்த அணி தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் என அழைக்கப்பட்டு வருகிறது. ஆரம்ப காலங்களில் மோசமாக செயல்பட்டு வந்த அந்த அணி கெட்டப்பை மாற்றிய பின் சமீப காலங்களாக ஒருவழியாக வெற்றிப்பாதையில் நடக்கத் தொடங்கியுள்ளது. அப்படிப்பட்ட டெல்லி அணி ஐபிஎல் ஏலத்தில் அதிக பட்சமாக கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கை 16 கோடிக்கு வாங்கியது.

Yuvraj-Singh

6. ராஜஸ்தான் ராயல்ஸ் : ஐபிஎல் வரலாற்றில் முதல் சாம்பியனாக விளங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது வரலாற்றிலேயே அதிக பட்சமாக கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் தென்ஆப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிசை 16.25 கோடிகளுக்கு வாங்கி அனைவரையும் அதிர வைத்தது.

7. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : முதலில் டெக்கான் சார்ஜர்ஸ் என்ற பெயரில் இருந்த ஹைதராபாத் அணியை அதன்பின் சன்ரைசர்ஸ் என்ற பெயரில் தமிழகத்தின் சன் குழுமம் வாங்கியது. அந்த அணி நிர்வாகம் அதிகபட்சமாக கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் இந்திய வீரர் மணிஷ் பாண்டேவை 11 கோடிக்கு விளையாட ஒப்பந்தம் செய்தது.

manish-pandey

8. பஞ்சாப் கிங்ஸ் : ஐபிஎல் வரலாற்றில் இதுவரை நடைபெற்ற ஏலங்களில் கண்மூடித்தனமாக பணத்தை செலவழிப்பதில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நிகராக யாரும் கிடையாது எனக் கூறலாம். முதலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் என அழைக்கப்பட்டு வந்த அந்த அணி கடந்த 2021-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம் வீரர் ஜே ரிச்சர்ட்சனை 14 கோடிகளுக்கு வாங்கியது.

Advertisement