- Advertisement -
உலக கிரிக்கெட்

பாகிஸ்தான் மானத்தை காப்பாற்றிய இலங்கைக்கு நன்றி.. தொடரை அங்க மாத்துறோம்.. தலைவர் நக்வி அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் 6 ரன்கள் வித்யாசத்தில் வென்ற பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அடுத்ததாக 2வது போட்டி நவம்பர் 14ஆம் தேதி பைசாபாத்தில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் அதற்கு முன் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி நாடு திரும்ப விரும்புவதாக இலங்கை வீரர்கள் தெரிவித்தனர். ஏனெனில் சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கார் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் இயற்கை எய்தினர். 27க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்ததால் பாகிஸ்தானில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

மானத்தைக் காப்பாற்றிய இலங்கை:

எனவே பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான பாகிஸ்தானிலிருந்து வெளியேறி நாடு திரும்ப விரும்புவதாக இலங்கை வீரர்கள் தெரிவித்தனர். சொல்லப்போனால் 2008ஆம் ஆண்டு பாகிஸ்தானில் விளையாடிய இலங்கை அணி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கரவாதிகள் இலங்கை அணியினர் மீது தாக்குதல் நடத்தியதை மறக்க முடியாது.

அதனால் 7 வருடங்களுக்கும் மேலாக வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை நிறுத்தியதையும் மறக்க முடியாது. அது போன்ற சூழ்நிலை மீண்டும் வந்து விடக்கூடாது என்ற அச்சத்துடன் இலங்கை வீரர்கள் நாடு திரும்ப விரும்பினார்கள். ஆனால் பாகிஸ்தான் அரசும் வாரியமும் முழுமையான பாதுகாப்பு கொடுக்கிறோம் என்று உறுதி அளித்துள்ளதாக இலங்கை வாரியம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

பாகிஸ்தான் தலைவர் நன்றி:

எனவே திட்டமிட்டபடி பாகிஸ்தானுக்கு எதிரான எஞ்சிய 2 போட்டிகளில் இலங்கை விளையாடும் என்றும் அந்நாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அதை மீறி நாடு திரும்பும் வீரர்கள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை வாரியம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தங்களுடைய மானத்தைக் காப்பாற்றும் வகையில் அறிவிப்பு வெளியிட்ட இலங்கைக்கு பாகிஸ்தான் வாரியத் தலைவர் மோசின் நக்வி நன்றி தெரிவித்துள்ளார்.

ஒருவேளை இலங்கை அணி பாதியிலேயே வெளியேறினால் வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை மீண்டும் புறக்கணிப்பார்கள். அப்படிப்பட்ட மோசமான நிலையில் இருந்து தங்களை காப்பாற்றிய இலங்கைக்கு நக்வி நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் எஞ்சிய 2 போட்டிகள் பைலாபாத்துக்கு பதிலாக ராவல்பிண்டியில் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மோர்கெல் இப்போ எதிரியாகிட்டாரு.. அவரை சமாளிச்சா இந்தியாவை வீழ்த்தலாம்.. தெ.ஆ அணிக்கு ஸ்மித் அட்வைஸ்

இது பற்றி ட்விட்டரில் நக்வி பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடர இலங்கை அணி எடுத்த முடிவுக்கு நன்றி. பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் நவம்பர் 14, 16 ஆகிய தேதிகளில் ராவல்பிண்டியில் நடைபெறும். இம்முடிவு விளையாட்டுத் திறன் மற்றும் ஒற்றுமையின் உணர்வை பிரகாசிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -