- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பயமற்ற பாகிஸ்தான் இந்தியாவை ஓடவிட்டதை மறக்க மாட்டேன்.. பெருமை பாடிய நக்வி.. ரசிகர்கள் பதிலடி

ஆசியக் கோப்பை 2025 ரைசிங் ஸ்டார்ஸ் டி20 தொடர் கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்தியா ஏ அணியை 8 விக்கெட் வித்யாசத்தில் பாகிஸ்தான் ஏ அணி தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா ஏ அணி 19 ஓவரில் 136 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்சி 45, நமன் திர் 35 ரன்கள் எடுத்தார்கள். அதனால் 101/3 என்ற நல்ல நிலையில் இருந்த இந்தியாவை சிறப்பாக பந்து வீசி சுருட்டிய பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஷாஹித் அஜிஸ் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய பாகிஸ்தான் அதிரடியாக பேட்டிங் செய்து 13.2 ஓவரில் 137/2 ரன்கள் குவித்து எளிதாக வென்றது.

- Advertisement -

பாகிஸ்தான் கொண்டாட்டம்:

அதிகபட்சமாக மாஸ் ஷடாக்ட் 79* (47) ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற வைத்தார். உடனே அதை பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்தியாவை கலாய்த்து கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக இந்தியாவை வெறும் 13 ஓவரில் தோற்கடித்து பாகிஸ்தான் ஓடவிட்டுள்ளதாக அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

அதன் உச்சமாக பாகிஸ்தான் வாரியத்தின் தலைவர் மோசின் நக்வி பயம் என்றால் என்னவென்றே தெரியாத வகையில் விளையாடிய பாகிஸ்தான் அணி இந்தியாவை மறக்க முடியாத வகையில் தோற்கடிள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தான் அணியின் வருங்காலம் ஒளிமையமாக இருப்பதாகவும் அவர் மகிழ்ச்சியை தெரிவித்தார். இது பற்றி ட்விட்டரில் நக்வி பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

இந்திய ரசிகர்கள் பதிலடி:

“இன்று பாகிஸ்தானுக்கும் பாகிஸ்தான் வாரியத்திற்கும் என்ன ஒரு பெருமையான நாள். நம்முடைய பாகிஸ்தான் (ஷாஹீன்கள்) அரசர்கள் இந்தியா ஏ அணியை 13.2 ஓவரில் இலக்கைத் தொட்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்கள். ஒரு ஆதிக்கம் மிகுந்த, பயமற்ற, மறக்க முடியாத செயல்திறனை நம்முடைய அணி ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடரில் வெளிப்படுத்தியுள்ளது”

இதையும் படிங்க: இந்த பிட்ச்சில் நான் கூட விக்கெட்ஸ் எடுப்பேன்.. இந்தியாவின் தோல்விக்கு தவறான செலக்சனே காரணம்.. ஸ்ரீகாந்த்

“நம்முடைய இளம் துப்பாக்கிகளிடமிருந்து சூப்பரான கிரிக்கெட் வந்துள்ளது. பாகிஸ்தானின் வருங்காலம் ஜொலிக்கிறது. தேசத்துக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார். அதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் 2025 ஆசியக் கோப்பையில் 3 முறை பாகிஸ்தானை அடித்து நொறுக்கி இந்திய அணி ஓடவிட்டதை நாங்களும் மறக்கவில்லை என்று பதிலடி கொடுக்கிறார்கள். மேலும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி, 2025 மகளிர் உலகக்கோப்பை ஆகிய ஐசிசி தொடர்களிலும் எங்கள் அணி பயமின்றி விளையாடி பாகிஸ்தானை தோற்கடித்ததை மறக்கவில்லை என்றும் அவருக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -