IPL 2023 : எங்க அப்பா ஹாஸ்பிட்டல்ல இருக்காரு, அவருக்கு வெற்றியை டெடிகேட் பண்றேன் – மும்பையை வீழ்த்திய ஹீரோ பேட்டி

Moshin Khan
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 17ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெற்ற 63வது லீக் போட்டியில் வெற்றிகரமான மும்பையை வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த லக்னோ பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை 90% உறுதி செய்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ பேட்டிங்க்கு சவாலான மைதானத்திலும் அதிரடியாக செயல்பட்டு 20 ஓவர்களில் 177/3 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மார்க்கஸ் ஸ்டோனிஸ் அட்டகாசமாக பேட்டிங் செய்து 89* (47) ரன்களும் கேப்டன் க்ருனால் பாண்டியா 49 (42) ரன்களும் எடுக்க மும்பை சார்பில் ஜேசன் பேரன்ஃடாப் 2 விக்கெட்களை சாய்த்தார்.

அதை தொடர்ந்து 178 ரன்களை துரத்திய மும்பைக்கு 90 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ரோஹித் சர்மா 37 (25) ரன்களும் இஷான் கிசான் 59 (39) ரன்களும் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஆனால் அவர்களை அவுட்டாக்கிய லக்னோ பவுலர்கள் அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் 7 (9) நேஹல் வதேரா 16 (20) விஸ்ணு வினோத் 2 (4) என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி திருப்பு முனையை உண்டாக்கினர். இருப்பினும் கடைசி நேரத்தில் டிம் டேவிட் 32* (19) ரன்கள் எடுத்ததால் வெற்றியை நெருங்கிய மும்பைக்கு கடைசி ஓவரில் வெறும் 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

- Advertisement -

தந்தைக்கு டெடிகேசன்:
அப்போது டிம் டேவிட், கேமரூன் கிரீன் என 2 அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்ததால் நிச்சயம் கடப்பாரை மும்பை பேட்டிங் வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அட்டகாசமாக பந்து வீசிய இளம் வீரர் மோசின் கான் வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து லக்னோவுக்கு த்ரில் வெற்றியை பெற்று கொடுத்தார். அந்த வகையில் ரவி பிஷ்னோய் மற்றும் யாஷ் தாகூர் ஆகியோர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை எடுத்தாலும் 89* ரன்கள் குவித்த ஸ்டோனிஸ் ஆட்டநாயகன் விருது வென்றாலும் அழுத்தமான கடைசி ஓவரில் அட்டகாசமாக செயல்பட்ட மோசின் கான் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக மும்பையை வீழ்த்தினார் என்றே சொல்லலாம்.

கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி 9 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை 5.97 என்ற துல்லியமான எக்கனாமியில் எடுத்து அனைவரது பாராட்டுகளைப் பெற்ற அவர் இந்த வருடம் காயத்தால் பெரும்பாலான போட்டிகளில் பங்கேற்கவில்லை. குறிப்பாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்து வந்த அவர் ஒரு வழியாக சமீபத்திய போட்டிகளில் களமிறங்கி நேற்று ஃபார்முக்கு திரும்பி அற்புதமான வெற்றியை பெற்றுக் கொடுத்தது அனைவரது பாராட்டுக்களை பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி நடைபெற்ற முந்தைய நாளில் தான் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமது தந்தை ஆபத்தான கட்டத்திலிருந்து திரும்பியதாக போட்டியின் முடிவில் தெரிவித்த மோசின் கான் இந்த வெற்றியை அவருக்கு அர்ப்பணிப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“காயத்தால் கடினமான நேரங்களை கடந்து ஒரு வருடம் கழித்து இந்த போட்டியில் விளையாடினேன். மேலும் என்னுடைய தந்தை நேற்று தான் மருத்துவமனையில் ஆபத்தான (ஐசியூ) பிரிவிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனவே இதை நான் அவருக்காக தான் செய்தேன். அவர் இந்த தருணத்தை மகிழ்ச்சியுடன் பார்த்திருப்பார். மேலும் கடந்த போட்டியில் சுமாராக செயல்படும் எனக்கு வாய்ப்பு கொடுத்த கௌதம் சார் போன்ற பயிற்சியாளர்கள் உதவி செய்ததற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்”

- Advertisement -

“வலைப்பயிற்சியில் எடுத்த பயிற்சியை கடைசி ஓவரில் பயன்படுத்தலாம் என்று நான் முடிவெடுத்தேன். க்ருனால் பாண்டியாவும் அதையே சொன்னார். அந்தத் திட்டத்துடன் ஸ்கோர் போர்டை பார்க்காமலேயே எந்தவித பதற்றமின்றி அமைதியுடன் கடைசி 6 பந்துகளில் வீசினேன். மேலும் பிட்ச் பிடிமானமாக இருந்ததால் நான் மெதுவான பந்துகளை வீச முயற்சித்தேன். அதில் 2 யார்க்கர் பந்துகளாக மாறி நன்றாக திரும்பியது” என்று கூறினார்.

இதையும் படிங்க:MI vs LSG : கையில இருந்த மேட்சை நாங்க தோக்க இதுவே காரணம். தோல்விக்கு பிறகு – ரோஹித் சர்மா வருத்தம்

அத்துடன் போட்டியின் முடிவில் தன்னுடைய தந்தைக்கு வீடியோ காலில் பேசிய மோசின் கான் தனது ஆட்டத்தை சமர்ப்பித்து வாழ்த்து பெற்றது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அப்படி கடைசி ஓவரில் தோற்ற மும்பை தன்னுடைய கடைசி போட்டியில் வென்றால் தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement