- Advertisement -
உலக கிரிக்கெட்

WI vs BAN : வழக்கமாக 3 ஆவது இடத்தில் இறங்கும் இவரை 5 ஆவது இடத்தில் இறங்க கேட்டுக்கொண்டோம் – மோர்தாசா

உலகக் கோப்பை தொடரின் 23 வது போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், மோர்தாசா தலைமையிலான வங்கதேச அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹோப் 96 ரன்களும், லீவிஸ் 70 ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

அதன் பின்னர் 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்கதேச அணி 41.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் ஆட்டமிழக்காமல் 124 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய வங்கதேச அணியின் கேப்டன் மோர்தசா கூறியதாவது : நான் நேற்று சொன்னபோது மாதிரி தான் நாங்கள் ஜெயிப்பதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. மேலும் நாங்கள் அனைத்து போட்டியும் ஜெயித்தே ஆகவேண்டும். என்னுடைய முழங்காலில் வலி என்னை வாட்டியது. இருப்பினும் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள்.

ஷாகிப் அல் ஹசன் சிறப்பாக விளையாடி எங்கள் அணிக்கு வெற்றியை தேடி தந்தார். கடந்த இரண்டு போட்டிகளாக ரஹீம் சிறப்பாக விளையாடினார். மேலும் சவுமியா சர்க்கார் மற்றும் தமீம் ஆகியோரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். லிட்டன் தாஸ் வழக்கமாக நம்பர் 3 இடத்தில் விளையாடுவார் ஆனால் நாங்கள் அவரை ஐந்தாவது இடத்தில் ஆட கேட்டுக்கொண்டோம் அவரும் அதனை ஏற்று விளையாடி இந்த போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார் என்று மோர்தாசா கூறினார்.

- Advertisement -
Published by