ரசல் விக்கெட்டை நான் சீக்கிரமே வீழ்த்த இதுவே காரணம் – ஆட்டநாயகன் க்றிஸ் மோரிஸ் பேட்டி

நடப்பு ஐபிஎல் தொடரின் 18ஆவது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையில் நடந்தது. இந்த இரண்டு அணிகளும் தான் விளையாடிய கடைசி போட்டியில் தோல்வியை சந்தித்து இருந்ததால், இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்ந்தெடுத்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 139 ரன்கள் எடுத்தது. பின்பு இரண்டாவது இன்னிங்சை ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் அடித்தது. இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு மிக அற்புதமாக இருந்தது. குறிப்பாக அந்த அணியின் கிறிஸ் மோரிஸ் சிறப்பாக பந்துவீசி முக்கியமான நேரத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான ஆண்ட்ரு ரஸல், தினேஷ் கார்த்திக், பேட் கம்மின்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 4 ஓவர்கள் வீசிய கிறிஸ் மோரிஸ் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

Morris

இதற்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இன்னிங்ஸ் முடிந்தபிறகு, பேட்டியளித்த கிறிஸ் மோரிஸ் ரஸலைப் பற்றி கருத்து தெரிவித்தார். அதில் அவர் ரஸலைப் பற்றி கூறும்போது : ஆண்ட்ரு ரஸல் உலகின் மிகப் பெரிய பிக் ஹிட்டர் ஆவார். சென்றைய போட்டியில் 20 பந்துகளில் அரைசதமடித்து அசத்தியிருந்தார். ஆனால் அதிர்ஷ்டம் என்பது எப்போதும் ஒரு பக்கமே இருந்துவிடாது. இன்றைக்கு அந்த அதிர்ஷ்டம் என் பக்கம் இருந்தது, அதனாலேயே அவருடைய விக்கெட்டை என்னால் எடுக்க முடிந்தது. மேலும் ஒவ்வொரு முறையும் அவருக்கு நான் பந்து வீசும் போது சிறப்பான பந்துகளை வீச நினைப்பேன்.

- Advertisement -

morris 1

ஆனால் சில பந்துகளை அவர் தனது அசாத்திய திறமையால் சிக்ஸ் அடித்து விடுவார். அதேசமயம் அவர் ஏதேனும் ஒரு சிறு தவறு செய்தால்கூட தனது விக்கெட்டை இழந்துவிட வேண்டியதுதான். இன்றைக்கு அந்த தவறை, நான் வீசிய பந்தில் அவர் செய்ததால் என்னால் அவரை அவுட்டாக முடிந்தது என்று கூறினார். இதுவரை ஐபிஎல் தொடர்களில் கிறிஸ் மோரிஸ், ரஸலுக்கு 24 பந்துகளை வீசி 38 ரன்கள் கொடுத்து 4 முறை அவரை அவுட்டாக்கியுள்ளார்.