ஆலன் டொனால்ட் மாதிரி.. மயங் யாதவ் லக்னோவின் ரோல்ஸ் ராய்ஸ்ன்னு அவர் பாராட்டுனாரு.. ஜான்டி ரோட்ஸ்

Jonty Rhodes 2
- Advertisement -

இளம் இந்திய கிரிக்கெட் வீரர் மயங் யாதவ் கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடினார். அந்த வாய்ப்பில் தொடர்ந்து 150 – 155 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய அவர் தனது முதல் 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த 2 ஆட்டநாயகன் விருதுகளை வென்று சாதனை படைத்தார். மேலும் 2024 சீசனில் அதிவேகமான பந்தை (156.7) வீசிய பவுலராகவும் அவர் சாதனை படைத்தார்.

அதனால் 2024 – 25 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவரை தேர்வு செய்யலாம் என்று சில முன்னாள் வீரர்கள் பாராட்டினர். இருப்பினும் 3வது போட்டியிலேயே காயத்தை சந்தித்த அவர் மேற்கொண்டு விளையாடவில்லை. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவின் ஆலன் டோனால்ட் போல மயங் யாதவ் லக்னோ அணியின் ரோல்ஸ் ராய்ஸ் என்று மோர்னே மோர்கெல் பாராட்டியதாக ஜாம்பவான் ஜான் ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ரோல்ஸ் ராய்ஸ் மயங் யாதவ்:

2023 சீசனில் லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருந்த மோர்கெல் பாராட்டும் அளவுக்கு மயங் யாதவ் வலைப்பயிற்சியில் அற்புதமாக பந்து வீசியதாக ஜான்டி ரோட்ஸ் கூறியுள்ளார். லக்னோ அணியின் தற்போதைய ஃபீல்டிங் பயிற்சியாளரான அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நான் பவுலிங் பயிற்சியாளர் கிடையாது. ஆனால் கடந்த சீசனில் மோர்னே மோர்கெல் இருந்தார்”

“மயங் யாதவ் செயல்பாடுகளை வலைப் பயிற்சியில் பார்த்து விட்டு மோர்னே மோர்கெல் “வாவ் இந்தப் பையன் பவுலர்களின் ரோல்ஸ் ராய்ஸ்” என்ற வகையில் சொன்னார். ஆலன் டொனால்டை நாங்கள் ரோல்ஸ் ராய்ஸ் என்றழைப்பது போலவே அவரைப் பற்றி மோர்கெல் பேசினார். அவர் லக்னோவின் ரோல்ஸ் ராய்ஸ். அவர் காயத்தை சந்தித்திருந்தாலும் சீசன் முழுவதும் அணியுடன் இருந்தார்”

- Advertisement -

ஜாம்பவான்களின் பாராட்டு:

“அவரை லக்னோ உரிமையாளர்கள் அணியுடன் வைத்திருக்க முடிவெடுத்தார்கள். அதனால் 2023 ஐபிஎல் தொடரில் விளையாடா விட்டாலும் அவர் முழுவதுமாக காயத்திலிருந்து குணமடைந்தற்காக அணியின் அங்கமாக இருந்தார். ஏனெனில் இந்த பையனிடம் அற்புதமான திறமை இருப்பதாக நாங்கள் நம்பினோம். அவர் விளையாடிய விளையாட்டுகளில் நாங்கள் திறமையை பார்த்தோம்”

இதையும் படிங்க: இதை செய்யும் ரோல்ஸ் ராய்ஸ் மயங் யாதவ்.. உம்ரான் மாதிரி சோடை போகமாட்டாரு.. ஜான்டி ரோட்ஸ்

“எனவே அவரை பருத்தி ஆடையில் போர்த்தாமல் எல்லோரும் கண்காணிந்தனர்” என்று கூறினார். இந்த நிலையில் மயங் யாதவ் காயத்திலிருந்து குணமடைந்தால் 2024 – 25 ஆஸ்திரேலிய தொடரில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் சமீபத்தில் கூறியிருந்தார். அத்துடன் மயங் யாதவ் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் வெற்றிக்கு கருப்பு குதிரையாக இருப்பார் என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement