இதை செய்யும் ரோல்ஸ் ராய்ஸ் மயங் யாதவ்.. உம்ரான் மாதிரி சோடை போகமாட்டாரு.. ஜான்டி ரோட்ஸ்

Jonty Rhodes
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்காக இளம் இந்திய வீரர் யாதவ் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் 150 – 155 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து பந்து வீசிய அவர் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அத்துடன் தனது முதல் 2 போட்டிகளிலும் தலா 2 விக்கெட்டுகள் எடுத்து லக்னோவை வெற்றி பெற வைத்த அவர் அடுத்தடுத்த ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அதனால் ஐபிஎல் வரலாற்றில் தனது முதலிரண்டு போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருது வென்ற முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையையும் மயங் யாதவ் படைத்தார். இருப்பினும் 3வது போட்டியிலேயே காயத்தை அவர் தற்போது குணமடைந்து வருகிறார். தற்போதைய நிலைமையில் அவர் உம்ரான் மாலிக்கு போல வந்த வேகத்திலேயே காணாமல் போய் விடக்கூடாது என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

- Advertisement -

உம்ரான் மாலிக் மாதிரி:

இந்நிலையில் மயங் யாதவ் ரோல்ஸ் ராய்ஸ் கார் போன்ற வேகத்தை கொண்டுள்ளார் என்று மோர்னே மோர்கெல் 2023 ஐபிஎல் தொடரில் பாராட்டியதாக லக்னோ அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் மயங் யாதவ் வேகத்துடன் தனது பந்து வீச்சில் லைன், லென்த் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருவதாகவும் ஜான்டி ரோட்ஸ் கூறியுள்ளார். எனவே உம்ரான் மாலிக் போல அவர் சோடை போக மாட்டார் என்று ஜான்டி ரோட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “2023 சீசனில் மயங் யாதவை வலைப்பயிற்சியில் பார்த்து விட்டு இந்த பையன் ரோல்ஸ் ராய்ஸ் போல் செயல்படுவதாக மோர்னே மோர்கல் தெரிவித்தார். மயங் யாதவ் போன்றவர் தினமும் வலைப்பயிற்சியில் 30 நிமிடங்கள் பந்து வீச வேண்டுமென்று அவசியம் கிடையாது. மனம் மற்றும் உணர்வுகள் ரீதியில் அவர் மேலே இருந்தால் மட்டும் போதும்”

- Advertisement -

ரோல்ஸ் ராய்ஸ் வேகம்:

“ஏனெனில் அவரிடம் இயற்கையான திறமை உள்ளது. உம்ரான் மாலிக்கிற்கு என்ன நடந்தது என்பதை நாம் பார்த்தோம். அதிரடியான வேகத்தில் வீசிய அவர் அனைவரையும் சுவாரசியப்படுத்தினார். ஆனால் அந்த வீரர் போட்டி திட்டத்துடன் பந்து வீசினாரா? என்பது கேள்வியாகும். ஏனெனில் இங்கே உலகின் சிறந்த பேட்ஸ்மேன்கள் விளையாடுகின்றனர். அவர்களுக்கு எதிராக நீங்கள் நல்ல வேகத்துடன் சரியான இடத்தில் பந்து வீசவில்லை என்றால் மைதானத்தில் அடி வாங்குவீர்கள்”

இதையும் படிங்க: 2007-ல நாங்க ஆடுனதுக்கும்.. 2024-ல இந்திய அணி விளையாடுனதுக்கும் வித்தியாசம் இருக்கு – ஹர்பஜன் சிங் கருத்து

“அதற்காக லக்னோ அணியை பொறுத்த வரை அவரைத் தூக்கி எறிந்து விடுவோம் என்று அர்த்தமல்ல. நன்கு தயாராவது வெற்றிக்கான சாவியாகும். தற்போது ஒரு வருடம் விளையாடாமல் அடுத்த சீசனில் விளையாட வரும் அவர் அதைச் செய்திருப்பார் என்று நம்புகிறேன். 2025இல் லக்னோவுக்காக விளையாடினாலும் இல்லாவிட்டாலும் திறமையான மயங் ஃபிட்டாகி முழு ஐபிஎல் தொடரிலும் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்” என்று கூறினார்.

Advertisement