2007-ல நாங்க ஆடுனதுக்கும்.. 2024-ல இந்திய அணி விளையாடுனதுக்கும் வித்தியாசம் இருக்கு – ஹர்பஜன் சிங் கருத்து

IND
- Advertisement -

தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது 2007-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது 2024-ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

இந்திய அணி பெற்ற எந்த வெற்றி பெரியது? :

இப்படி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றிய பின்னர் பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வரும் வேளையில் 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கும், 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கும் இடையே என்ன வித்தியாசம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் பேசி உள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : 2007-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்ற போது அப்போதுதான் டி20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால் எங்களுக்கு எவ்வாறு டி20 போட்டியை விளையாட வேண்டும் என்ற அனுபவம் இல்லாமல் இருந்தது.

அதோடு அந்த உலகக் கோப்பை தொடருக்கான அணியில் தோனி முதல் முறையாக கேப்டனாக இருந்தார். அதோடு நான், சேவாக், யுவராஜ் சிங், அகார்கர் போன்ற ஒரு சில வீரர்களே அனுபவ வீரர்களாக இருந்தோம்.

- Advertisement -

ஆனால் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் போது இந்திய அணியில் பெரும்பாலும் மேட்ச் வின்னர்கள் தான் இருந்தார்கள். ஷிவம் துபே மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் மட்டுமே அனுபவம் இல்லாத வீரர்களாக இருந்தனர். அதைத்தவிற்கு அணைவருமே மேட்ச் வின்னர்கள் தான்.

இதையும் படிங்க : ரிஷப் பண்டிற்கு போட்டியாக இருக்கபோவதே இவர்தான்.. அப்படி இவரிடம் என்ன ஸ்பெஷல் தெரியுமா? – விவரம் இதோ

அதோடு தற்போது டி20 போட்டிகள் உச்சத்தில் இருக்கும் வேளையில் எவ்வாறு விளையாட வேண்டும் என்று அனைவருக்கும் தெரியும். அதனால் இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றியதை விட 2007 தொடரை இந்திய அணி கைப்பற்றியது தான் சிறப்பான ஒன்று என ஹர்பஜன் சிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement