ரிஷப் பண்டிற்கு போட்டியாக இருக்கபோவதே இவர்தான்.. அப்படி இவரிடம் என்ன ஸ்பெஷல் தெரியுமா? – விவரம் இதோ

Jurel
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த பின்னர் தற்போது வங்கதேச அணிக்கு எதிராக இம்மாதம் துவங்கவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட காத்திருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது.

ரிஷப் பண்டிற்கு பதிலாக துருவ் ஜுரேல் :

ஏனெனில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அசத்தலான ஆட்டத்தை ஏற்கனவே ரிஷப் பண்ட் வெளிப்படுத்தி உள்ளதால் அவரே முதன்மை விக்கெட் கீப்பாராக செயல்படுவார். அந்த அளவிற்கு ரிஷப் பண்டின் ஆட்டம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது.

- Advertisement -

குறிப்பாக 2018 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ரிஷப் பண்ட் இதுவரை 33 போட்டிகளில் விளையாடி 2271 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை பண்ட் 5 சதங்கள் மற்றும் 11 அரைசதங்கள் அடித்துள்ளார்.

அதேவேளையில் அவருக்கு போட்டியாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியில் துருவ் ஜுரேல் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது. ஏனெனில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அசலான செயல்பாட்டை வெளிப்படுத்தி அவருக்கு இந்த ஆண்டு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

அந்த மூன்று போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சுக்கு எதிராக அழுத்தத்தமான நிலையிலும் மிகச்சிறப்பாக ரன்களை குவித்து அசத்தியிருந்தார். அதன்படி அந்த மூன்று போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடிய அவர் ஒரு அரைசதம் அடித்ததுடன் 190 ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க : 143 ரன்ஸ் 10 விக்கெட்ஸ்.. அரிதான சாதனை படைத்த வங்கதேசம்.. தோல்வியிலிருந்து பாகிஸ்தானை மழை காப்பாற்றுமா?

அவரது அந்த முதிர்ச்சியான ஆட்டத்தை பார்த்த தேர்வுக்குழுவினர் மீண்டும் அவருக்கு வாய்ப்பை வழங்குவார்கள் என்று தெரிகிறது. ஒருவேளை ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக சொதப்பும் பட்சத்தில் டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மாறும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement