- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணியில் என்னுடைய முதல் பணி இதுதான்.. அதுமட்டும் நடந்தா சக்ஸஸ் தான் – மோர்னே மோர்கல்

அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருடன் இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் தனது குடும்பத்தாருடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதால் இந்திய கிரிக்கெட் வாரியமும் அவரது அந்த வேண்டுகோளை ஏற்று அவரை உரிய மரியாதையுடன் வழியனுப்பி வைத்தது.

இந்திய அணியில் என்னுடைய பணி இதுதான் :

அதனை தொடர்ந்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்ட வேளையில் கௌதம் கம்பீருடன் ஐபிஎல் தொடரில் இணைந்து செயலாற்றிய குழுவினருக்கும் இந்திய அணியில் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டன.

- Advertisement -

அந்த வகையில் லக்னோ அணியில் கம்பீருடன் இணைந்து பணியாற்றிய அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கலை தற்போது இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பிசிசிஐ நியமித்துள்ளது. இலங்கை அணிக்கு எதிரான தொடரின் போது இந்திய அணியில் இணையாமல் இருந்த மோர்கல் வங்கதேச தொடரில் இந்திய அணியுடன் அதிகாரவபூர்வமாக இணைந்தார்.

இந்நிலையில் இந்திய அணியில் பந்துவீச்சு பயிற்சியாளராக தனது பணி எவ்வாறு இருக்கும் என்பது குறித்து தற்போது அவர் சில கருத்துக்களை பகிர்ந்து உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் செட்டப் தானாகவே சிறப்பாக இயங்கும் ஒன்று. அதை பராமரிப்பதும் அதில் சில சில முன்னேற்றங்களை ஏற்படுத்துவோமே எங்களுடைய இலக்கு.

- Advertisement -

இந்திய அணியின் தரம் பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தற்போதைய இந்திய அணி மிக பலம் வாய்ந்த அணி. அனுபவ வீரர்கள் நிறைய பேர் இருப்பதினால் தற்போது இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. எங்களுடைய முதல் வேலையே வீரர்களுடன் நன்றாக பழகி அவர்களை புரிந்துகொண்டு அவர்களின் பலம், பலவீனத்தை கண்டறிய வேண்டும்.

இதையும் படிங்க : 9 வருடங்கள்.. இந்தியாவின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் கனவில் விளையாடும் மழை.. கடினமான வாய்ப்பு

அப்படி முழுவதையும் நாங்கள் கண்ட பின்னர் தேவையான விதைகளை விதைப்பதே முக்கியம். தற்போதைக்கு இந்திய அணிக்குள் ஒரு நல்ல சூழலை அமைக்க விரும்புகிறோம். அணிக்குள் ஒற்றுமையும் அமைதியான சூழலும் இருந்தால் சிறந்த செயல்பாடு தானாக வெளிவரும். எனவே தற்போதைக்கு இந்திய அணியை நல்ல சூழலில் வைத்திருக்க விரும்புகிறேன் என மோர்கல் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -