
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வென்ற இந்தியா இரண்டாவது போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. அந்த நிலையில் காபா கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 14ஆம் தேதி மூன்றாவது போட்டியில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா இரண்டாவது நாள் முடிவில் 405-7 ரன்கள் எடுத்துள்ளது.
அதனால் ரோகித் சர்மாவின் முடிவு தவறாக மாறியுள்ளது என்றே சொல்லலாம். அதற்கேற்றார் போல் இந்திய பவுலர்களில் ஜஸ்ப்ரித் பும்ரா மட்டும் தனி ஒருவனாக போராடி 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆனால் சுமாராக வீசிய மற்ற பவுலர்களை அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 152, ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்கள் எடுத்தனர்.
அந்த வகையில் பவுலிங் சுமாராக இருப்பதாலும் கடந்த போட்டியிலேயே இந்தியாவின் பேட்டிங் திணறியதாலும் மழை வராமல் போனால் இப்போட்டியிலும் ஆஸ்திரேலியா வெல்வது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் மழை பெய்யக்கூடிய சூழ்நிலையில் பிட்ச் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்தே டாஸ் வென்று முதலில் ஃபீல்டிங் செய்ய தீர்மானித்ததாக இந்தியாவின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார்.
துரதிஷ்டவசமாக 50 – 80 ஓவர்களில் ஸ்மித் – ஹெட் தங்களுடைய திட்டத்தை உடைத்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பும்ராவை போல விக்கெட்டுகள் எடுக்கவில்லை என்றாலும் குறை சொல்லும் அளவுக்கு மற்ற இந்திய பவுலர்கள் சுமாராக பந்து வீசவில்லை என்றும் மோர்கெல் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நல்ல ஃபார்மில் அடுத்தடுத்த போட்டிகளில் நன்றாக விளையாடிய டிராவிஸ் ஹெட்டுக்கு நாங்கள் பாராட்டுகளை மட்டுமே கொடுக்க முடியும்”
“50 – 80 ஓவர்கள் வரை நாங்கள் கொஞ்சம் ரன்கள் கொடுத்து விட்டோம். அந்த இடங்களில் நாங்கள் இன்னும் நன்றாக செயல்பட்டிருக்க வேண்டும். ஸ்மித்தும் சேர்ந்து பழைய பந்தில் நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்தது எங்களை அழுத்தத்தில் தள்ளியது. சில நாட்களாக மழை பொழியும் வானிலை நிலவுகிறது. அதில் சரியான இடத்தில் பந்துகளை போட்டால் நாங்கள் விக்கெட்டுகளை எடுக்க முடியும் என்று நினைத்தோம். ஆனால் அது நடைபெறவில்லை”
இதையும் படிங்க: எம்.எஸ் தோனி மற்றும் கிர்மானிக்கு அடுத்து 3 ஆவது இந்திய வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் – ரிஷப் பண்ட் அசத்தல் சாதனை
“துரதிஷ்டவசமாக அது எங்கள் வழியில் செல்லவில்லை. பிட்ச்சும் பவுலிங்க்கு கை கொடுக்க கொஞ்சம் நேரம் எடுத்தது. ஆகாஷ் தீப் தனது இதயத்திலிருந்து நன்றாக பந்து வீசினார். சிராஜ் ஆரம்பத்திலேயே கொஞ்சம் காயத்தை சந்தித்தாலும் இன்று முழுவதும் பந்து வீசினார். ஆனால் உலகின் நம்பர் ஒன் பவுலரான பும்ராவுக்கு உங்களின் மற்ற பவுலர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். அதற்காக மற்ற பவுலர்களை நான் குறை சொல்ல மாட்டேன்” என்று கூறினார்.