ஒரு கட்டத்துல தோத்துட்டோம்னு நெனச்சேன். ஆனா கடைசில – வெற்றி குறித்து பேசிய இயான் மோர்கன்

Morgan

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் நடப்பு 14-வது ஐபிஎல் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற முதலாவது குவாலிபயர் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் இந்த இறுதிப் போட்டியில் விளையாட இரண்டாவது அணியாக செல்லப் போவது யார் ? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2வது குவாலிபயர் போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.

dcvskkr

இந்த போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணியானது கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 135 ரன்கள் மட்டுமே குவித்தது. அதன் பின்னர் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஆவது ஓவரின் 5-வது பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றிக்கு சென்றது. இதன் மூலம் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா அணி விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற சிறப்பான வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியின் கடைசி நான்கு ஓவர்களில் நடந்த நிகழ்வை மறக்க விரும்புகிறோம். எங்களது துவக்க வீரர்கள் சிறப்பாக அமைத்துக் கொடுத்தனர். இருப்பினும் இறுதியில் போராடி வெற்றி பெற்றுவிட்டோம். இந்த போட்டியில் வெற்றி பெற்றது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இது போன்ற சுவாரசியமான கிரிக்கெட் போட்டிகளில் இறுதிநேர வெற்றி என்பது முக்கியமான ஒன்றுதான்.

tripathi 1

கடைசி 2 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற போது பவுலிங் சைடுக்கு தான் அதிக சாதகமாக இருந்தது. அந்த நிலையில் நாங்கள் சற்று வருத்தப்பட்டாலும் த்ரிப்பாதி சிறப்பாக சிக்சர் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுவிட்டார். இதே போன்று அவர் பலமுறை எங்கள் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். எங்கள் அணியின் வீரர்கள் இந்த போட்டியில் சுதந்திரமாக விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

இதையும் படிங்க : என்னால பேச முடியல. கொல்கத்தா அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு ரிஷப் பண்ட் – பேசியது என்ன ?

வீரர்கள் மட்டுமின்றி அணியின் நிர்வாகிகள், ஊழியர்கள் என அனைவரும் நல்ல சூழ்நிலையை அமைத்து கொடுப்பதால் எங்களால் தொடர்ச்சியான வெற்றிகளைக் பெற்றுக் கொடுக்க முடிகிறது என்று யான் மோர்கன் மகிழ்ச்சியுடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement