- Advertisement -
உலக கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து அணி ஜெயிக்கனும்னா ரவி சாஸ்திரி தான் ஹெல்ப் பண்ணனும் – மான்டி பனேசர் கருத்து

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாகவே ஆஸ்திரேலியா மண்ணில் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை வெல்லவில்லை என்கிற ஒரு நிலை இருந்து வந்தது.

இங்கிலாந்து அணி ஜெயிக்க ரவி சாஸ்திரி உதவனும் : மான்டி பனேசர்

இதன் காரணமாக இந்த ஆண்டு நிச்சயம் ஆஸ்திரேலியா மண்ணில் அவர்களை வீழ்த்தி ஆஷஸ் தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கிய இங்கிலாந்து அணி அந்த அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து இந்த தொடரினை இழந்துவிட்டது. இதன் காரணமாக பாஸ்பால் அணுகுமுறை மீது பலரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் பிரெண்டன் மெக்கல்லம் பயிற்சியாளராக வந்ததிலிருந்து அதிரடியாக விளையாடி வெற்றிகளை பெற்று வந்த இங்கிலாந்து அணி தற்போது அதே யுக்தி காரணமாகவே தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் வெளியேற்றப்பட வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டுமெனில் ரவி சாஸ்திரி போன்ற ஒரு பயிற்சியாளர் இங்கிலாந்து அணிக்கு நியமிக்கப்பட வேண்டும் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் தனது கருத்தினை கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்த தோல்விக்கு பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சிந்திக்க வேண்டும். ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலியா மண்ணில் தோற்கடிப்பது எப்படி? என யாருக்கு தெரியும். ஆஸ்திரேலியாவின் பலவீனங்களை சரியாக கண்டறிந்து அதற்கு ஏற்றார்போல் திட்டமிட்டு வீரர்களை தயார்படுத்த வேண்டும். அந்த வகையில் ரவி சாஸ்திரி போன்ற ஒரு பயிற்சியாளரை இங்கிலாந்து அணி நியமித்தால் நிச்சயம் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து அணியால் தோற்கடிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : அகர்கர், கம்பீர் ஒன்னும் பண்ண முடியாது.. விராட் கோலி அதுக்கு ரெடி ஆகிட்டாரு.. கோச் ராஜ்குமார் பேட்டி

ஏற்கனவே இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி கடந்த 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டின் போது இந்திய அணி அங்கு டெஸ்ட் தொடரை கைப்பற்றிய உதவியதாலே மான்டி பனேசர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -