அவருக்கு ஓய்வு குடுத்துட்டு அஷ்வினுக்கு வாய்ப்பு கொடுங்க – மான்டி பனேசர் கருத்து

Panesar

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைய இரண்டாவது போட்டியில் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

indvseng

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை ஆகஸ்ட் 25ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை அடையும் என பலரும் கூறி வருகின்றனர். ஏற்கனவே விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது பலமாக உள்ளதால் நிச்சயம் 3வது டெஸ்ட் போட்டியும் இந்திய அணிக்கு சாதகமாகவே இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது 3வது டெஸ்ட் போட்டி குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளராக மான்டி பனேசர் கூறுகையில் : 3வது போட்டி நடைபெறும் இந்த மைதானம் ஸ்பின் பவுலர்களுக்கு சாதகமான ஒரு மைதானம். எனவே நிச்சயம் ரவிசந்திரன் அஸ்வின் இந்த போட்டியில் சேர்க்கப்பட வேண்டும்.

Ashwin

கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடாத அவர் நிச்சயம் மூன்றாவது போட்டியில் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது. லீட்ஸ் மைதானம் ஸ்பின் பவுலர்களுக்கு சற்று சாதகமான மைதானம் என்பதனால் நிச்சயம் இந்தியா இரண்டு ஸ்பின்னர்களுடன் விளையாடுவது கைகொடுக்கும். இந்திய அணியின் பந்துவீச்சு தற்போது சிறப்பாகவே உள்ளது.

- Advertisement -

Ashwin

இருப்பினும் ஷமிக்கு ஓய்வு கொடுக்கும் வகையிலும், அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் இந்த மாற்றத்தை இந்திய அணி செய்யலாம் என மான்டி பனேசர் தனது கருத்தினை கூறியுள்ளார். அதுமட்டுமின்றி நிச்சயம் இந்த தொடரில் இந்தியா தான் முன்னிலை பெறும் என்றும் இந்திய அணி இதே போன்ற ஆக்ரோஷமான விளையாட்டை தான் விளையாட விரும்புவார்கள் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement