என்னதான் கோலி கில்லாடியா இருந்தாலும் அந்த விஷயத்துல கோட்டை விட்றாரு – மான்டி பனேசர் கருத்து

Panesar
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை டி20 தொடரானது கடந்த அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி தற்போது வரை மிக சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட சூப்பர் 12-சுற்றின் இறுதி கட்டத்தில் தற்போது அனைத்து அணிகளும் விளையாடி வரும் நிலையில் அரையிறுதிக்கு தேர்வாகும் அணிகள் எவை என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். அந்த வகையில் குரூப் -2ல் இடம்பெற்றிருக்கும் இந்திய அணிக்கு அடுத்துவரும் இரண்டு போட்டிகள் மிக முக்கியமான போட்டிகளாக அமைய உள்ளன.

IND

- Advertisement -

ஏனெனில் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது.

இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி ஒரு மெகா வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதுவும் நியூசிலாந்து அணி மீதமுள்ள 2 போட்டிகளில் ஒரு தோல்வியை சந்திக்க வேண்டும் என்ற ஒரு நிலையும் உள்ளது. இந்நிலையில் இப்படி இந்திய அணி அடுத்த 2 போட்டிகளிலும் பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை உள்ள வேலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி மீது சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Ind

இதுகுறித்து பேட்டி அளித்துள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் கூறுகையில் : கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான். சேசிங் செய்வதில் கில்லாடியாக இருக்கிறார். ஆனால் கேப்டன்சியில் அவரால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதே உண்மை.

- Advertisement -

இதையும் படிங்க : நிறைய பேர் வெய்ட்டிங்ல இருக்காங்க. ஆனா அடுத்த கேப்டனாக இவரே கரெக்ட்டா இருப்பார் – சேவாக் நம்பிக்கை

எனவே இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல வேண்டுமெனில் அடுத்து இரண்டு போட்டிகளில் பிரமாண்டமான வெற்றி பெற்றாக வேண்டும். அதேவேளையில் நியூசிலாந்து அணி ஏதாவது ஒரு போட்டியில் தோற்றால் தான் அதை உறுதி செய்ய முடியும் என்பதால் இப்போதைக்கு கோலியால் இந்திய அணியை அரையிறுதிக்கு கொண்டு செல்வது கஷ்டம் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement