நிறைய பேர் வெய்ட்டிங்ல இருக்காங்க. ஆனா அடுத்த கேப்டனாக இவரே கரெக்ட்டா இருப்பார் – சேவாக் நம்பிக்கை

Sehwag

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி மூன்று வகையான கிரிக்கெட்டிக்கும் கடந்த பல ஆண்டுகளாக கேப்டனாக திகழ்ந்து வருகிறார். இவரது தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டாலும் ஐசிசி கோப்பையை கைப்பற்ற முடியவில்லை என்ற குறை மட்டும் உள்ளது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் t20 உலகக் கோப்பைக்கு பிறகு தான் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்ததால் இப்போதே அடுத்த கேப்டன் யார் ? என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

Kohli

மேலும் இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக யார் வருவார்கள் என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள், விமர்சகர்கள் ஆகியோர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் இந்திய அணியின் கேப்டனாக வரும் வீரர் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னை பொருத்தவரை இந்திய அணியின் அடுத்த கேப்டனாக வருவதற்கு அணியில் நிறைய வீரர்கள் இருக்கின்றனர்.

rohith

ஆனால் ரோகித் சர்மா தான் அந்த பதவிக்கு சரியாக இருப்பார். ஏனெனில் ஐபிஎல் தொடரில் மும்பை அணியை வெற்றிகரமாக வழிநடத்தி உள்ள ரோகித் சர்மா நிச்சயம் டி20 போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் கேப்டனாக திகழ்வார். எனவே அடுத்த கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று தெரிவித்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணியின் அடுத்த கேப்டனா இவரை செலக்ட் பண்ணுங்க. சாதிச்சி காட்டுவாரு – தினேஷ் கார்த்திக் ஓபன்டாக்

மேலும் இளம் வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் ராகுல் ஆகியோர் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படலாம் என்றும் கார்த்திக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement