இந்திய அணியின் அடுத்த கேப்டனா இவரை செலக்ட் பண்ணுங்க. சாதிச்சி காட்டுவாரு – தினேஷ் கார்த்திக் ஓபன்டாக்

Karthik
- Advertisement -

இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்க்கும் கேப்டனாக செயல்பட்டு வருபவர் விராட் கோலி. என்னதான் இந்திய அணியை இவர் சிறப்பாக வழிநடத்தி வந்தாலும் ஐசிசி நடத்தும் முக்கியமான தொடர்களில் கோப்பையை வெல்ல முடியாமல் போனது விராத் கோலியின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக பி.சி.சி.ஐ-யும் இவரது கேப்டன் பதவி மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

Kohli

ஏற்கனவே இவர் இந்த உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் பதவியை துறக்க உள்ளேன் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக யார் செயல்படப் போகிறார்கள் ? என்பது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் வீரரான தினேஷ் கார்த்திக் தற்போது இந்திய அணியின் அடுத்த கேப்டன் குறித்து பேசியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை நிச்சயம் ரோகித் சர்மா அடுத்த கேப்டனாக வாய்ப்பு கொடுத்தால் அவர் கண்டிப்பாக இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவார். ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் இவரது தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அடுத்த இரண்டு உலக கோப்பை தொடருக்கு கேப்டனாக ரோகித் அணியில் திறம்பட இருப்பார்.

rohith

ஏற்கனவே தனக்கு கிடைத்த கேப்டன்சி வாய்ப்புகளில் தனது திறமையை நிரூபித்துள்ளார் ரோகித்சர்மா. அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் அவரது கேப்டன்சி திறன்களை வெளிக்காட்டுவார். லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா ஏற்கனவே ஒரு வெற்றிகரமான கேப்டனாக இருந்துள்ளார். அதுமட்டுமின்றி அவருக்கு அவருடைய திறன் குறித்தும் நிச்சயம் அவர் தெரிந்து வைத்திருப்பார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணியின் புதிய கேப்டனாக இந்த 2 பேரில் ஒருத்தரே இருக்கனும் – புதிய கோச் டிராவிட் விருப்பம்

எனவே அவருக்கு கேப்டன் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அணியை சிறப்பாக வழிநடத்துவார் என்று நம்பிக்கை என்னிடம் உண்டு. மேலும் இந்திய அணியின் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் அல்லது கே.எல் ராகுல் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு தரலாம். ஏனெனில் அடுத்து வரும் இந்திய அணிக்கு நிச்சயம் அவர்கள் இந்த துணை கேப்டன் பதவி மூலம் அனுபவம் பெற்று இந்திய அணியை தலைமை தாங்கத் தயார் ஆவார்கள் என்று தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement