இந்திய அணியின் புதிய கேப்டனாக இந்த 2 பேரில் ஒருத்தரே இருக்கனும் – புதிய கோச் டிராவிட் விருப்பம்

Dravid
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ரவி சாஸ்திரி தனது பதவியிலிருந்து விலக உள்ளார். அதை தொடர்ந்து இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளார் என பிசிசிஐ ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது.

Dravid

- Advertisement -

இந்நிலையில் 48 வயதாகும் ராகுல் டிராவிட் அடுத்த இந்திய அணியின் கேப்டனாக செயல்பட சரியாக இருக்கும் நபர் யார் ? என்பது குறித்து அவர் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். அது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் :

இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளராக என்னை நியமிப்பதற்கு மிகவும் பெருமை அடைகிறேன். மேலும் எனது பணியில் நான் சிறப்பாக செயல்படுவேன் என நம்புகிறேன். ரவிசாஸ்திரி அணியை சரியாக வழி நடத்தி உள்ளார். அதனை அப்படியே நான் சிறப்பாக கொண்டு செல்வேன்.

ஏற்கனவே 19 வயதுக்குட்பட்டோர் அணி, இந்திய ஏ அணி, தேசிய கிரிக்கெட் அகாடமி என எனது பணிகளில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளேன். நிச்சயம் அடுத்த இரு வருடங்களுக்கு இந்திய அணியை உச்சத்திற்கு கொண்டு செல்வேன் என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த டி20 சாம்பியன் வீரர் – ரசிகர்கள் வருத்தம்

மேலும் அடுத்த கேப்டன் குறித்து அவர் பேசுகையில் : என்னை பொறுத்தவரை என்னுடைய முதல் தேர்வாக ரோகித் சர்மா தான் இருப்பார். அவரை தொடர்ந்து கே.எல் ராகுல் அணியின் கேப்டனாக இருந்தால் நன்றாக இருக்கும் என குறிப்பிட்டு இந்த இரண்டு வீரர்களை பற்றி டிராவிட் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement