சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த டி20 சாம்பியன் வீரர் – ரசிகர்கள் வருத்தம்

Wi-1

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஏழாவது உலகக் கோப்பை டி20 தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் 12 அணிகள் இரண்டு குழுக்களாக பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அந்த வகையில் நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி இம்முறையும் கோப்பையை கைப்பற்றும் அளவிற்கு பலமான அணியாக இந்த தொடரின் ஆரம்பத்தில் பார்க்கப்பட்டது.

wi

ஆனால் பயிற்சி போட்டிகளிலும் சரி தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12-சுற்று போட்டிகளிலும் சரி வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளை பெற்று தொடரில் இருந்து வெளியேறி உள்ளது. இதுவரை சூப்பர் 12-சுற்றில் விளையாடிய நான்கு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அவர்கள் வெற்றி பெற்றாலும் அது பயனிலை.

- Advertisement -

இதன் காரணமாக இந்த டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் அணி தவறிவிட்டது என்றே கூறலாம். இந்நிலையில் அந்த அணியின் முன்னணி அனுபவ ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக அறிமுகமான பிராவோ இதுவரை 40 டெஸ்ட் போட்டிகள், 164 ஒருநாள் போட்டிகள் மற்றும் 90 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Bravo

சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி உலக அளவில் நடைபெற்று வரும் பல டி20 லீக் கிரிக்கெட்டில் முக்கிய வீரராக பங்கேற்று வருகிறார். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியா அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு இருக்கா ? இது நடந்தா யாராலும் தடுக்க முடியாது – விவரம் இதோ

இந்நிலையில் 38 வயதான பிராவோ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறும் கடைசி டி20 போட்டியுடன் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் தொடர்ந்து டி20 லீக் போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் ஓய்வு தற்போது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement