இந்தியா அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு இருக்கா ? இது நடந்தா யாராலும் தடுக்க முடியாது – விவரம் இதோ

Kohli
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக் கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடர் ஆரம்பிக்கும் முன்னர் இந்திய அணி இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்டது. ஆனால் சூப்பர் 12-சுற்றின் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மிகவும் மோசமான நிலையில் தோல்வியை சந்தித்ததால் ரன் ரேட்டில் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்தது.

IND

- Advertisement -

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் மூலம் வெற்றி பெற்றதால் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுமா ? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் அது குறித்த சில விவரங்களை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

இப்படி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்பு இருக்கிறதா ? என்ற கேள்விக்கு பதில் அளிக்க வேண்டுமெனில் கீழே வரும் சில நிகழ்வுகள் நடைபெற வேண்டும். அதன்படி இந்திய அணி நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அடுத்த 2 போட்டிகளிலும் மிக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். பின்பு நியூசிலாந்து அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் தோல்வி அடைய வேண்டும்.

Williamson

அதே போன்று இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று, நியூசிலாந்து அணி ஒரு போட்டியில் தோல்வி அடையும் பட்சத்தில் இரு அணிகளும் சமமான 6 புள்ளிகளைப் பெறும். இதன் காரணமாக இறுதியில் ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்திய அணி அடுத்த 2 போட்டிகளிலும் பெரிய ரன் குவிப்பை வழங்கவேண்டும். அதுமட்டுமின்றி நியூஸிலாந்து ஒரு போட்டியில் தோற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement