இந்திய அணியின் தொடர் வெற்றிகளுக்கு விராட் கோலி காரணமல்ல. எல்லா புகழும் இவருக்கு தான் – மான்டி பனேசர் கருத்து

Panesar
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கேப்டன் பதவியை துறந்ததும் அதனைத் தொடர்ந்து இந்திய அணியை விராட் கோலி கையிலெடுத்தார். அது முதல் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பான கேப்டன்சி செய்துவரும் விராட் கோலி இந்திய அணியை வெற்றியின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

Dhoni

- Advertisement -

குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி யாரும் தொடாத உச்சத்தை கடந்த பல ஆண்டுகளாக தொட்டுள்ளது. வெளிநாடுகளிலும் வெற்றிகளை குவித்து வரும் விராட் கோலியின் அணி பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனாலும் விராட் கோலி தலைமையிலான அணியில் ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது மட்டும் தான் குறை. அது தவிர இந்திய அணியின் வெற்றிகளுக்கு கோலி முக்கிய காரணமாக அமைகிறார். ஆனால் தொடர்ச்சியாக இந்திய அணி பெரும் இந்த வெற்றிகளுக்கு கோலி மட்டும் காரணம் இல்லை என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மான்டி பனேசர் கூறியுள்ளார்.

இந்திய அணியின் தொடர் வெற்றிகளுக்கு கோலி மட்டுமின்றி பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் முக்கிய காரணமாக இருக்கிறார் இன்று பனேசர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ரவி சாஸ்திரிக்கு முன்னால் இருந்த பயிற்சியாளரான அனில் கும்ப்ளே உடன் விராட் கோலிக்கு நல்ல உறவும் புரிதலும் இல்லாமல் இருந்தது. ஆனால் ரவிசாஸ்திரி உடன் கோலி நன்றாக செட் ஆகிவிட்டார்.

Shastri

இதன் காரணமாகவே பயிற்சியாளர் பதவி முடிந்தும் ரவிசாஸ்திரி மீண்டும் பதவியில் நீட்டிக்க விராட் கோலி பரிந்துரைத்தார். அதுமட்டுமின்றி தற்போதைய இந்திய அணி பெற்றுவரும் வெற்றிகளுக்கு காரணம் கோலி மட்டும் கிடையாது ரவி சாஸ்திரியின் அற்புதமான பயிற்சியும் தான் முக்கிய காரணம் என்றும் அவர் கூறி உள்ளார். மேலும் தொடர்ந்து பேசுகையில் : ஆஸ்திரேலியாவில் ஒரு இன்னிங்சில் போது இந்திய அணி 36 ரன்களுக்கு சுருண்டது.

Shastri

ஆனாலும் விராட் கோலி இல்லாமையே அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று அந்த தொடரையும் கைப்பற்றியது. அந்த தொடர் முழுவதும் ரவிசாஸ்திரி இளம் வீரர்களுக்கு அளித்த பயிற்சியும், ஊக்கமே அந்த வெற்றிக்கு காரணம் அதுமட்டுமின்றி பல தொடர்களுக்கும் ரவி சாஸ்திரி இந்திய அணி வீரர்களை நன்றாக பயிற்சி செய்வது மட்டுமின்றி தயார் செய்து வருகிறார் எனவும் ரவி சாஸ்திரி குறித்து பனேசர் புகழ்ந்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement