இங்கிலாந்தின் அடுத்த பயிற்சியாளராக.. இந்தியாவை சேர்ந்த அவரை போடுங்க.. பனேசர் பேட்டி

Monty panesar
- Advertisement -

ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடரில் இதுவரை நடைபெற்ற முதல் 3 போட்டிகளிலும் இங்கிலாந்தை தோற்கடித்துள்ள ஆஸ்திரேலியா 3 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது. அதனால் 2010/11க்குப்பின் தொடர்ந்து 15வது வருடமாக சொந்த மண்ணில் ஆஷஸ் கோப்பையை வென்று ஆஸ்திரேலியா சாதனை படைத்துள்ளது. மறுபுறம் 15வது வருடமாக ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியை கூட வெல்ல முடியாமல் இங்கிலாந்து திண்டாடுகிறது.

இத்தனைக்கும் இம்முறை பென் ஸ்டோக்ஸ் தலைமையில் பஸ்பால் அணுகு முறையில் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியாவில் கோப்பையை வெல்வோம் என்று இங்கிலாந்தினர் தெரிவித்தனர். ஆனால் அதற்கு தகுந்தார் போல் விளையாடாத இங்கிலாந்து 11 நாட்களில் படுதோல்வியை சந்தித்துள்ளது. அதன் காரணமாக பிரெண்டன் மெக்கல்லம் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

இங்கிலாந்தின் அடுத்த கோச்:

ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற அதிரடியாக விளையாட வேண்டும் என்ற பஸ்பால் அணுகுமுறையை அவர் தான் இங்கிலாந்து அணியில் விதைத்தார். ஆனால் அந்த அணுகு முறையில் இங்கிலாந்து அணி பெருமைப்படும் அளவுக்கு பெரிதாக வெற்றி பெறவில்லை. சொல்லப்போனால் சொந்த மண்ணில் நடைபெற்ற அடுத்தடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு கூட இங்கிலாந்து தகுதி பெறவில்லை.

இந்நிலையில் மெக்கல்லத்திற்கு இந்தியாவின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி இங்கிலாந்தின் பயிற்சியாளராக தகுதியுடையவர் என்று முன்னாள் வீரர் மான்டி பனேசர் கூறியுள்ளார். குறிப்பாக ரவி சாஸ்திரி வழிகாட்டுதலில் ஆஸ்திரேலியாவில் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களை முதல் முறையாக வென்று இந்தியா சாதனை படைத்தது. எனவே அவரை பரிந்துரைக்கும் பனேஷர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

பனேசர் பரிந்துரை:

“ஆஸ்திரேலியாவை எப்படி தோற்கடிக்க வேண்டும் என்பதை கச்சிதமாக தெரிந்த ஒருவரை பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். ஆஸ்திரேலியாவின் பலம், பலவீனம், திட்டங்கள், மனம் ஆகியவற்றைத் அறிந்து, அதிலிருந்து எப்படி உங்களால் சாதகத்தை எடுத்துக் கொள்ள முடியும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும்”

இதையும் படிங்க: சாம்சன், கில் சண்டையில்.. நியாயமா வந்துருக்க வேண்டிய அவரை மறந்துட்டீங்களே.. ஆகாஷ் சோப்ரா ஆதங்கம்

“அந்த வகையில் ரவி சாஸ்திரி இங்கிலாந்து அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளராக வரவேண்டும் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார். முன்னதாக ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்த காலத்தில் தான் விராட் கோலி தலைமையில் இந்தியா 2017 – 2021 வரை தொடர்ச்சியாக நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ஜொலித்தது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement