- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தன்னோட இந்த வசதிக்காகவே கம்பீர்.. ஸ்ரேயாஸ்க்கு பதில் கில்லை கேப்டனாக்கிருக்காரு.. மான்டி பனேசர் பேட்டி

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்குகிறது. அந்தத் தொடரில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்ட சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதற்காக ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் கழற்றி விடப்பட்டது மிகப்பெரிய விமர்சனங்களை உண்டாக்கியது.

குறிப்பாக 2024 ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்ற ஷ்ரேயாஸ் 2025 சீசனில் பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து ஃபைனல் அழைத்துச் சென்றார். 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் அடித்த அவர் இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். மேலும் 2025 ஐபிஎல் தொடரில் 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி நல்ல ஃபார்மில் இருக்கும் அவருக்கு ஆசியக் கோப்பையில் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இடம் கிடைக்கவில்லை.

- Advertisement -

கம்பீர் வசதிக்காக:

மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில் 754 ரன்கள் அடித்து இங்கிலாந்து மண்ணில் இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார். அதனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலும் அவரை கேப்டனாக்க நினைக்கும் பிசிசிஐ இப்போதே துணைக் கேப்டனாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் நன்மைக்காக மட்டும் சுப்மன் கில் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் மான்டி பனேசர் கூறியுள்ளார்.

இளம் வீரராக இருந்தால் தமக்கு எந்த எதிர்ப்புப் தெரிவிக்க மாட்டார் என்று கருதியே சுப்மன் கில்லை கேப்டனாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்ஷிப் திறமைகளைக் கொண்டிருப்பதே இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் தடுமாற முக்கிய காரணமாகும்”

- Advertisement -

பனேசர் கருத்து:

“ஏனெனில் தற்சமயத்தில் இந்திய அணி அந்த அனைத்தையும் பூர்த்தி செய்துள்ளது. எனவே ஸ்ரேயாஸை கழற்றி விடுவது ஒரு இளம் வீரரை அணிக்குள் கொண்டு வருகிறது. அந்த இளம் வீரர் (கில்) விளையாடுவதற்கு உற்சாகமானவராகவும், பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நிர்வகிப்பதற்கு எளிதானவராகவும் இருக்கிறார்”

இதையும் படிங்க: 2007 டி20 உ.கோ 6 பந்தில் 6 சிக்ஸ் அடிச்சதும்.. யுவ்ராஜ் என்கிட்ட வந்து போர்ஸ் கார் கேட்டாரு.. லலித் மோடி பேட்டி

“எனவே ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருப்பதாலேயே ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினமாகிறது என்று நினைக்கிறேன். அதே சமயம் தொடர்ச்சியாக ரன்கள் அடிக்கும் பட்சத்தில் அவருக்கு கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும். ஏனெனில் அவரிடம் நம்ப முடியாத திறமை இருக்கிறது. உலக அணிகளுக்கு எதிராக இந்தியா ஒரே சமயத்தில் 2 – 3 அணிகளை களமிறக்கி விளையாடும் அளவுக்கு திறமையும் அதிர்ஷ்டத்தையும் கொண்டிருப்பதற்கு ஆசீர்வாதம் பெற்றிருக்க வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -