மன்கட் பிரச்சனைக்கு ஒரே தீர்வு காண தோனியை பின்பற்ற வேண்டும் – முன்னாள் இங்கி வீரர் சரியான கோரிக்கை

Mankad MS Dhoni
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3வது போட்டியிலும் 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. செப்டம்பர் 24ஆம் தேதின்று நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 50 ரன்களும் தீப்தி சர்மா 68* ரன்களும் எடுத்தனர். அதை துரத்திய இங்கிலாந்து ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 35.2 ஓவரில் 118/9 என தடுமாறியதால் தோல்வியும் உறுதியானது.

இருப்பினும் கடைசி நேரத்தில் 47 ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடிய இளம் வீராங்கனை சார்லி டீன் தீப்தி சர்மா வீசிய 44வது ஓவரில் எதிர்ப்புறமிருந்து சிங்கிள் எடுப்பதற்காக பந்து வீசுவதற்கு முன்பாகவே கிரீஸ் விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார். அதை கவனித்த தீப்தி 3வது பந்தில் ரன் அவுட் செய்ததால் வென்ற இந்தியா வரலாற்றில் முதல் முறையாக மகளிர் கிரிக்கெட்டில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து கோப்பையை வென்றது.

- Advertisement -

மன்கட் சர்ச்சை:
ஆனாலும் எதிர்பாராத வகையில் மன்கட் முறையில் ரன் அவுட்டான சார்லி டீன் கண் கலங்கி நின்ற தருணத்தை தொலைக்காட்சியில் வர்ணனை செய்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் உசேன் இந்தியா வென்றாலும் கிரிக்கெட் தோற்றதாக வர்ணித்தார். அதுபோக வேண்டுமென்றே தீப்தி சர்மா காத்திருந்து ரன் அவுட் செய்ததாக சாம் பில்லிங்ஸ், டிம் பிரேஸ்னன், ஜேம்ஸ் ஆண்டர்சன் உட்பட நிறைய முன்னாள் இந்நாள் இங்கிலாந்து வீரர்களும் ரசிகர்களும் இந்திய வீராங்கனையை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

ஆரம்ப காலம் முதலே நடைமுறையில் இருந்து வரும் இந்த வகையான ரன் அவுட் முன்னாள் இந்திய வீரர் மன்கட் பெயரில் அழைக்கப்பட்டதுடன் நேர்மைக்கு புறம்பானதாக பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் வெள்ளை கோட்டுக்கு வெளியே ஒருசில இன்ச்கள் காலை வெளியே வைத்து பந்து வீசினால் கூட நோ பால் கொடுத்து அதற்கு தண்டனையாக பவுலர்களுக்கு ஃப்ரீ ஹிட் வழங்கப்படும் போது பேட்ஸ்மேன்கள் மட்டும் ரன்களை எடுக்க முன்கூட்டியே வெளியேறுவது சரியா என்ற கோட்பாட்டைக் கொண்ட தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஐபிஎல் தொடரில் ஜோஸ் பட்லரை மன்கட் செய்து உலக அளவில் விமர்சனங்களை சந்தித்தாலும் தனது கருத்தில் பின்வாங்காமல் இருந்தார்.

- Advertisement -

அவரது தொடர்ச்சியான குரலுக்கு காது கொடுத்த லண்டனின் எம்சிசி அமைப்பு மன்கட் முறையை ரன் அவுட்டாக மாற்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளியிட்ட அறிவிப்பை கடந்த வாரம் ஐசிசியும் ஏற்றுக்கொண்டது. அப்படிப்பட்ட நிலையில் 2019இல் வெற்றி பெறாமலேயே அதிக பவுண்டரிகளை அடித்து விட்டோம் என்ற முட்டாள்தனமான விதிமுறையை காட்டி நியூசிலாந்தை ஏமாற்றி உலக கோப்பை வென்றதை விட தீப்தி சர்மா விதிமுறைகளை மீறி நடக்கவில்லை என்று இந்திய ரசிகர்கள் இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அதுபோக விரேந்தர் சேவாக், ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற ஏராளமான இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் இங்கிலாந்துக்கு பதிலடியும் தீப்திக்கு ஆதரவும் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் உலக அளவில் மீண்டுமொரு முறை மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள இந்த அவுட்டை தடை செய்யுமாறு சிலர் கூறினாலும் நட்சத்திர இந்திய வீரர் எம்எஸ் தோனியை பின்பற்றுவதே சரியான வழி என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் கூறியுள்ளார்.

- Advertisement -

பவுலர்கள் ஒரு இன்ச் காலை வெளியே வைத்தால் தண்டனையாக நோ பால் கொடுப்படும் நிலையில் பேட்ஸ்மேன்களும் பந்து வீசும் வரை வெள்ளை கோட்டுக்கு உள்ளேயே இருக்க வேண்டும் என வலியுறுத்தும் அவர் ஐபிஎல் தொடரில் க்ருனால் பாண்டியா பந்து வீசும் போது கடைசி வரை கோட்டை விட்டு வெளியேறாமல் விதிமுறையை கடைபிடித்த தோனியின் வீடியோவை சுட்டிக்காட்டி அதை அனைவரும் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : IND vs AUS : இந்திய அணிக்கெதிராக யாரும் படைக்காத சாதனையை படைத்த கேமரூன் கிரீன் – விவரம் இதோ

இந்த விவாதங்களுக்கு மத்தியில் இந்திய ரசிகர் ஒருவர் பதிவிட்ட வீடியோவிற்கு பதிலளித்த அவர் பேட்டிங் பவுலிங் ஆகிய இரண்டுக்கும் விதிமுறை சமமாக இருப்பதே சரியானது என்ற வகையில் பேசியுள்ளது நிறைய ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது.

Advertisement