IND vs AUS : இந்திய அணிக்கெதிராக யாரும் படைக்காத சாதனையை படைத்த கேமரூன் கிரீன் – விவரம் இதோ

Cameron-Green
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று ஹைதராபாத் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

INDvsAUS

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது துவக்கத்திலிருந்தே அதிரடி காட்டி 20 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக டிம் டேவிட் 27 பந்துகளில் 54 ரன்களையும், துவக்க வீரர் கேமரூன் கிரீன் 21 பந்துகளில் 52 ரன்களையும் குவித்து அசத்தினர். அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ள வேளையில் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதனால் தற்போது போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த துவக்க வீரரான கேமரூன் கிரீன் இந்திய அணிக்கு எதிராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

Cameron Green 1

அந்த சாதனை யாதெனில் இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக அதிவேக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சார்லஸ் முன்னிலையில் இருந்தார். இந்திய அணிக்கு எதிராக கடந்த 2016-ஆம் ஆண்டு அவர் 20 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார்.

- Advertisement -

அவரை தொடர்ந்து 2009-ஆம் ஆண்டு நாக்பூர் மைதானத்தில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான குமார் சங்ககாரா 21 பந்துகளில் அரைசதம் அடித்து இருந்தார். இந்நிலையில் அவர்கள் இருவரையும் தாண்டிய கேமரூன் கிரீன் இன்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று வரும் போட்டியில் 19 பந்துகளில் 50 ரன்கள் குவித்து இந்த பட்டியலில் இந்திய அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : காயத்தால் தவிக்கும் ஜடேஜாவுக்கு முன்னே குத்தாட்டம் போட்டு கடுப்பேற்றிய ஷிகர் தவான் – வைரல் வீடியோ உள்ளே

இந்த ஆட்டத்தில் துவக்க வீரராக களமிறங்கிய கேமரூன் முதல் பந்தில் இருந்தே அடிக்க ஆரம்பித்து இறுதியில் 21 பந்துகளை சந்தித்த வேளையில் 7 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 52 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement