ஒரே போட்டியில் 219 ரன்களை அடித்திருக்கிறேன்.. 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறேன்.. ஆனாலும் இங்கிலாந்து அணியில் இடம் இல்லை.! புலம்பும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர்

இங்கிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான மொயின் அலி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இடம்பெறாமல் கவுண்டி கிரிக்கெட்டில் விளைய்டி வருகிறார். இதற்கு காரணம், இங்கிலாந்து ஆடுகளங்கள் அனைத்தும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாகவே இருக்கும். எனவே இங்கிலாந்து அணி தற்போது ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்கி வருகிறது.

moin 2

இங்கிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளராக அடில் ரஷீத் விளையாடி வருகிறார். அவர் ஒரு முழு நேர சுழற்பந்து வீச்சாளராவர். மொயின் பேட்டிங் செய்யக்கூடியவர் மேலும் சுழற்பந்தும் வீசுவார். ஆனாலும் அவர் முழு நேர சுழற்பந்து வீச்சாளர் இல்லை என்பதால், அணியில் அவர் பெயர் இருந்தும் பிளேயிங் லெவெனில் அவருக்கு இடம் கிடைக்காமல் உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து கவுண்டி அணிக்காக தற்போது விளையாடி வரும் மொயின் அலி கவுண்டி போட்டியில் இரட்டை சதம்(219) அடித்து அசத்தியுள்ளார். மேலும் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். எனவே இங்கிலாந்து அணியில் இருந்து அழைப்பு வரும் என்று காத்து கொண்டு இருக்கிறார்.இங்கிலாந்து அணியில் ஏற்கனவே, ஆல்ரவுண்டர்கள் சிறப்பாகவே விளையாடி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

moin 1

இதுகுறித்து கருது தெரிவித்த மொயின் அலி: இங்கிலாந்து அணியின் அழைப்புக்காக நான் காத்திருக்கிறேன். அணியில் இருந்து அழைப்பு வந்தால் நிச்சயம் மகிழ்ச்சி அடைவேன், வரவில்லை என்றாலும் பரவாயில்லை. மேலும் கவுண்டி போட்டிகளில் கவனம் செலுத்தி எனது ஆட்டத்திறனை மேம்படுத்தி கொண்டு பலமாக மீண்டும் திரும்பி வருவேன் என்று தெரிவித்தார்.