GT vs MI : ஒரே ஓவரில் 6 சிக்ஸ் அடிச்சாலும் பரவாயில்ல. சூரியகுமாரை வீழ்த்த நான் போட்ட திட்டம் இதுதான் – மோஹித் சர்மா பேட்டி

Mohit-Sharma-2
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற முக்கியமான இரண்டாவது குவாலிபயர் போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியானது ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை மே 28-ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவிருக்கும் இந்த இறுதிப்போட்டியில் சி.எஸ்.கே மற்றும் குஜராத் அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சையில் மோதுகின்றனர்.

Mohit Sharma 1

- Advertisement -

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் 234 ரன்கள் என்கிற இலக்கினை துரத்திய மும்பை அணி ஒரு கட்டத்தில் நல்ல நிலையில் இருந்தவேளையில் மோஹித் சர்மா பந்துவீச வந்ததும் மும்பை அணியின் வீரர்களை ஒட்டுமொத்தமாக காலி செய்து அசத்தலான பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்தார்.

அதன்படி இந்த இரண்டாவது குவாலிபயர் போட்டியில் 2.2 ஓவர்களை மட்டுமே வீசிய மோஹித் சர்மா 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவரது இந்த சிறப்பான பந்துவீச்சு குஜராத் அணியின் அற்புதமான வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய மோஹித் சர்மா கூறுகையில் :

Mohit Sharma

இந்த போட்டியில் நான் இவ்வளவு விரைவாக 5 விக்கெட்டை வீழ்த்தியதில் மகிழ்ச்சி. இந்த மைதானத்தில் பந்து நின்று சென்றதால் எளிதாக விக்கெட்டுகள் கிடைத்தன. இருப்பினும் மும்பை அணி சார்பாக திலக் வர்மா, சூரியகுமார், கேமரூன் கிரீன் ஆகியோர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒருவேளை அவர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தால் போட்டி எங்களுடைய கையிலிருந்து நழுவியிருக்க கூட வாய்ப்பிருந்திருக்கும்.

- Advertisement -

நான் சூரியகுமார் யாதவிற்கு எதிராக பந்துவீசும் போது புதிதாக எதையும் முயற்சி செய்யக்கூடாது என்று நினைத்தேன். டீம் மீட்டிங்கிலும் நாங்கள் அதைத்தான் பேசியிருந்தோம். ஏனெனில் சூரியகுமார் யாதவிற்கு எதிராக எதையாவது புதிதாக முயற்சி செய்தால் அதுவே அவருக்கு சாதகமாகிவிடும். எனவே அவருக்கு எதிராக லென்த் பந்துகளை மட்டுமே வீச நினைத்தேன்.

இதையும் படிங்க : IPL 2023 : இந்த பவுலிங்கை தாண்டி சிஎஸ்கே கப் ஜெயிக்கிறது கஷ்டம் தான் – கில்லுடன் சேர்ந்து மிரட்டும் குஜராத்தின் மும்மூர்த்திகள்

அப்படி சரியான லென்ந்தில் பந்தினை வீசினால் அவரது ஷாட்களை அவர் விளையாடுவதில் சிரமம் இருக்கும் என்று நினைத்தேன். அவ்வாறு நான் பந்துவீசி 6 சிக்ஸர்கள் சென்றிருந்தால் கூட நான் பெரிதாக யோசித்திருக்க மாட்டேன். அதேபோன்று சரியான லென்ந்தில் பந்துவீசியே அவரது விக்கெட்டை வீழ்த்தியிருப்பேன் என மோஹித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement