சிங்கம் மாதிரி போனாரு.. 2019இல் அம்பயர்களுடன் சண்டையிட்ட பின் தோனி சொன்னது பற்றி மோஹித் சர்மா

Mohit Sharma 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியை பலரும் கேப்டன் கூல் என்று அழைப்பது வழக்கமாகும். இருப்பினும் அவரும் சில நேரங்களில் பொறுமையை இழந்து கோபப்பட்ட தருணங்கள் நிறைய உள்ளது. அந்த வகையில் கடந்த 2019 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனி களத்திற்கே சென்று அம்பயர்களுடன் வாக்குவாதம் செய்ததை மறக்க முடியாது.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற அப்போட்டியில் கடைசி ஓவரை வீசிய பென் ஸ்டோக்ஸ் ஒரு பந்தை ஹை புல் டாஸாக வீசினார். அப்போது நேராக இருந்த அம்பயர் உல்ஃஹாஸ் கந்தே அது நோபால் என்று அறிவித்தார். ஆனால் பக்கவாட்டில் இருந்த அம்பயர் ப்ரூஸ் ஆக்சன்ஃபோர்ட் நோபால் கிடையாது என்று மாற்றி அறிவித்தார்.

- Advertisement -

சிங்கம் மாதிரி சென்ற தோனி:

அதனால் கோபமடைந்த தோனி களத்திற்கு சென்று அவர் நோபால் கொடுக்கும் போது நீங்கள் மட்டும் ஏன் மறுக்கிறீர்கள் என்று ஆக்சன்ஃபோர்டிடம் வாக்குவாதம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. கடைசியில் தீர்ப்பு சாதகமாக மாறாத நிலையில் மிட்சேல் சான்ட்னர் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைத்தார். இருப்பினும் களத்தில் நடுவர்களுடன் வாக்குவாதம் செய்ததற்காக தோனிக்கு அப்போட்டியில் 50% சம்பளம் அபராதமாக விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அப்போட்டியில் அவுட்டானதால் கோபத்தில் இருந்த தோனி நோபால் வழங்காததால் மேலும் கோபமடைந்து வாக்குவாதம் செய்ய சிங்கத்தை போல சென்றதாக மோகித் சர்மா கூறியுள்ளார். அந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அது சென்னையின் வெற்றிக்கு தோனி அவுட்டாகியிருக்கக் கூடாது என்ற சூழ்நிலையாக இருந்தது”

- Advertisement -

நோபால் சர்ச்சை:

“அப்போது திடீரென அது நடந்தது. எங்களிடம் “ஒரு அம்பயர் நோபால் கொடுத்தார் தானே?” என்று தோனி கேட்டார். குழப்பத்தில் இருந்த நாங்கள் ஆம் அம்பயர் கையை உயர்த்தினார் என்று சொன்னோம். அப்படி சொன்னதும் தோனி நிற்கவில்லை. நாங்கள் மஹி பாய் போகாதீர்கள் என்று சொன்னோம். ஆனால் அவர் திரும்பியை பார்க்கவில்லை. அவர் களத்தில் இறங்கிய விதம் சிங்கம் மைதானத்திற்குள் நுழைந்தது போல் எங்களுக்கு இருந்தது”

இதையும் படிங்க: ரிஷப் பண்ட் சிக்ஸ் அடிச்சா உடைஞ்சு விழுந்துரும்.. கான்பூர் மைதானத்தின் அவலம்.. ரசிகர்கள் அதிருப்தி

“அதன் பின் மீண்டும் வந்த அவர் லேப்டாப்பை எடுத்து அந்தப் பந்தை காட்டுமாறு சொன்னார். அதைப் பார்த்து இது கண்டிப்பாக நோபால் என்று தோனி சொன்னார். நாம் வெற்றி அல்லது தோல்வி பெறுவது முக்கியமல்ல ஆனால் அழுத்தத்தில் ஒரு முடிவை கொடுத்து விட்டு அதை மாற்றுவது சரியல்ல என்று தோனி எங்களிடம் சொன்னார். அது அப்படி நடந்திருக்கக் கூடாது. இறுதியில் பரபரப்பில் அப்படி நடந்து விட்டது உண்மையில் தாம் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது என்று தோனி சொன்னார்” எனக் கூறினார்.

Advertisement