ரிஷப் பண்ட் சிக்ஸ் அடிச்சா உடைஞ்சு விழுந்துரும்.. கான்பூர் மைதானத்தின் அவலம்.. ரசிகர்கள் அதிருப்தி

Kanpur
- Advertisement -

இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டி சென்னையில் நடைபெற்றது. அப்போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி பாகிஸ்தானை போல வீழ்த்துவோம் என்று சவால் விடுத்த வங்கதேசத்தை தோற்கடித்து முன்னிலை பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் 2வது போட்டி உத்தரப்பிரதேசத்தில் உள்ள கான்பூர் நகரில் இருக்கும் க்ரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. வரும் செப்டம்பர் 27ஆம் தேதி துவங்கும் அந்தப் போட்டிக்காக கான்பூர் சென்றடைந்துள்ள இந்திய அணியினர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 1952 முதல் அம்மைதானத்தில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

மோசமான மைதானம்:

அதில் இந்தியா ஒருமுறை கூட தோல்வியை சந்தித்ததில்லை. அந்தளவுக்கு ராசியாக இருக்கும் கான்பூர் மைதானத்தில் இம்முறையும் இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் கான்பூர் மைதானத்தில் ரசிகர்கள் அமரும் சி பால்கனி தரமாக இல்லை என்று தெரிய வந்துள்ளது. அதனால் 4800 ரசிகர்கள் அமரக்கூடிய அந்த தளத்தில் 1700 பேர் மட்டுமே போட்டியை பார்ப்பதற்கான டிக்கெட் விற்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

குறிப்பாக அந்த தளம் வலுவாக இல்லை என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதை சீரமைக்க நாட்கள் தேவைப்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது பற்றி உத்திரபிரதேச மாநில வாரியத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் அன்கிட் சேட்டர்ஜி இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ரிஷப் பண்ட் சிக்ஸர் அடித்தால்:

“4800 கொள்ளளவு கொண்ட தளத்தில் 1700 டிக்கெட் மட்டுமே விற்குமாறு எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதை சீரமைக்கும் பணி அடுத்த சில நாட்களாக தொடரும். இந்த மைதானம் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் எங்களுடைய நேரடி கட்டுப்பாட்டில் இல்லை. எனவே இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதற்கு தேவையான சிறந்த விஷயங்களை நாங்கள் செய்துள்ளோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: இந்திய அணியில் கபில் தேவ் மாதிரி பிளேயர்ஸ் இல்லன்னு சொல்றவங்க.. இதையும் பாருங்க.. கெளதம் கம்பீர்

இது பற்றி மைதான இன்ஜினியர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை ரிஷப் பண்ட் அடிப்பதை பார்த்து வெறும் 50 ரசிகர்கள் துள்ளிக் குதித்தால் கூட அந்த தளம் தாங்காது. மிகவும் மோசமாக உள்ள அந்த தளம் சீரமைக்கப்பட வேண்டும்” என்று கூறினார். இதனால் சர்வதேச போட்டி நடைபெறும் மைதானத்தை சரியாக கவனிக்காமல் இருக்கும் பிசிசிஐ மீது இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்திய வருகிறார்கள்.

Advertisement