கோலி மீது எந்த தப்பும் இல்ல. அவர் இந்த 2 வீரர்களின் கலவை – முன்னாள் வீரர் அமர்நாத் பேட்டி

Amarnath
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து இந்திய வீரர் ஒருவரை சராமாரியாக விமர்ச்சித்து வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் 1983ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றவருமான ஜோஹிந்தர் அமர்நாத், அந்த வீரருக்கு ஆதரவாக பேசியுள்ளார். தனியார் வலைதளம் ஒன்றிர்கு அவரளித்துள்ள பேட்டியில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவனுமான விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகிய இருவரும் இணைந்த கலவைதான் அந்த இந்திய வீரர் என்று கூறியிருக்கிறார்.

IND

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியை ட்ரா செய்வதற்கான அதிக வாய்ப்புகள் இருந்த போதும், இந்திய அணியானது படுமோசமாக விளையாடி தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த தோல்விக்கு பல காரணங்கள் இருக்கும் போதும், இந்திய அணியின் கேப்டனான விராட் கோஹ்லி அணியை சரியாக வழி நடத்தவில்லையென்றும், அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்ற கருத்துகளை இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இப்படி ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கோபத்திற்கு உள்ளாகி இருக்கும், விராட் கோஹ்லிக்கு ஆதரவாக பேசிய அமர்நாத் கூறியதாவது; விராட் கோஹ்லி ஒரு சிறந்த வீரர் மட்டுமில்லாமல் ஒரு சிறந்த கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். தற்போது நாமெல்லாம் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். இந்த மாதிரி சூழ்நிலைகளில் இதுபோன்ற கருத்துகள் எழத்தான் செய்யும். நம்முடைய எதிர்பார்ப்புகள் நடைபெறாதபோது, ஏற்பட்ட ஏமாற்றத்தில் இப்படி பேசுவதால் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை.

kohli 1

அவருக்கு பதிலாக மற்றொருவரை கேப்டனாக நியமித்தால் அதனால் எந்தவித மாற்றமும் நிகழ்ந்துவிடாது. ரிக்கி பாண்டிங் மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகிய இருவரும் இணைந்த கலவையாக இருக்கும் விராட் கோஹ்லி, இந்த தலைமுறையின் மிகச் சிறந்த வீரராக உருவெடுத்திருக்கிறார். அனுபவம் வாய்ந்த அவர் மிகச் சிறந்த கேப்டனாக செயல்படுவார் என்று அவர் கூறியிருக்கிறார்.

shami-1

2017ஆம் ஆண்டு ஒரு நாள் மற்றும் டி20 ஆகிய போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பும் விராட் கோஹ்லியிடமே ஒப்படைக்கப்பட்டது. அதற்குப் பிறகு அதே ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஷ் ட்ராபி மற்றும் 2019இல் நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பைகளை தவறவிட்ட அவர், தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையையும் தவறவிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement