இந்தியாவின் ஒரே கவலை..! ஷிகார் தவான் வடிவம்..! மொஹிந்தர் அமர்நாத் சொன்ன ரகசியம்..?

- Advertisement -

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைபற்றியது. இந்த தொடரின் வெற்றியை அடுத்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நாளை துவங்க இருக்கிறது. இந்த தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் படு மும்மரமாக இருந்து வருகிறது.
dhawan
நாளை (ஜூலை12 ) தொவங்கவுள்ள இந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தான் வருத்தமளிக்ககூடியவாறு இருக்கிறார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மொஹிந்தர் அமர்நாத் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மூன்று டி20 தொடரிலும் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் சிறப்பாக விளையாடவில்லை. முதல் மூன்று டி20 போட்டிகளிலும் இவர் அடித்த ரன்கள் 4,10,5 என்ற சொற்ப ரன்னில் தான் இருந்தது.

தற்போது ஒரு நாள் தொடர் தொடங்க இருக்கும் நிலையில் இந்திய அணியின் ஷிகர் தவான் ஆட்டம் தான் கொஞ்சம் வருத்தமளிக்கும் விடயமாக உள்ளது என்று மொஹிந்தர் அமர்நாத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்தியா டைம்ஸ் பத்திரிகையில் வெளியான அவர் தெரிவித்துள்ள செய்தியில் “இந்திய அணிக்கு இது ஒரு சிறப்பான துவக்கம் தான். கண்டிப்பாக இந்திய அணி இதே ஆட்டத்தை ஒரு நாள் போட்டியிலும் தொடரும். வித்தியாசமான பல வீரர்கள் மூன்று டி20 போட்டியிலும் சிறப்பாக விளையாடினர். குறிப்பாக ரோஹித் ஷர்மா மூன்றாவது டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
amarnath
இந்திய அணியில் வருத்தப்படவேண்டிய ஒரே விடயம் ஷிகர் தவான் தான். ஆனால், அவர் கண்டிப்பாக மீண்டும் பழைய ஆட்டத்திற்கு திரும்புவார். அவருக்கு 50 ஓவர் போட்டிகளில் செட்டில் ஆகா கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்வார், அது அவரது பழைய ஆட்டத்தை மீண்டும் கொண்டுவர உதவியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Advertisement