இதென்ன சினிமாவா? அங்கேயே கோப்பையை வாங்காத இந்தியா எதுக்கு கேட்குறீங்க.. யூசுப் விமர்சனம்

Mohammed Yousf
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அத்தொடரின் முடிவில் பாகிஸ்தான் வாரியத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஆனால் அவருடைய கையால் கோப்பையை வாங்க முடியாது என்று இந்திய அணி தெரிவித்து விட்டது.

அதனால் ஏமாற்றமடைந்த மோசின் இந்தியா எப்படி வெற்றியை கொண்டாடுகிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காக கோப்பையை கையோடு எடுத்துச் சென்றார். மறுபுறம் ஆசியக் கவுன்சில் தலைவராகவும் இருக்கும் அவர் வேறு யாரிடமாவது கொடுத்து கோப்பையைக் கொடுப்பார் என்று இந்திய அணியினர் களத்திலேயே காத்திருந்தனர். இறுதியில் கோப்பையை வாங்காததால் இந்தியாவுக்கு கொடுக்கப்படவில்லை என்று ஆசிய கவுன்சில் சார்பில் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இதென்ன சினிமாவா:

அதற்காக வருத்தமடையாத இந்திய அணி கையில் கோப்பை இருப்பது போல் கொண்டாடி அவருக்கு பதிலடி கொடுத்தது. இதற்கிடையே தம்முடைய செயலுக்காக இந்தியாவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நக்வி கூறினார். மேலும் இந்தியாயாவுக்கு கோப்பை வேண்டுமெனில் துபாயில் இருக்கும் ஆசிய கவுன்சில் அலுவலகத்திற்கு வந்து தமது கையால் வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். அதனால் கடுப்பான பிசிசிஐ ஆசியக் கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி முன்னாள் பாகிஸ்தான் விட முகமது யூசுப் இந்தியாவை விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நக்வி சார் செய்தது முற்றிலும் சரியானது. இந்தியா அந்த சமயத்திலேயே கோப்பையை வாங்கியிருக்க வேண்டும். ஆசிய கவுன்சில் மற்றும் ஐசிசி விதிமுறைப்படி அங்கே தலைவராக நின்ற அவருடைய கைகளால் மட்டுமே கோப்பை கொடுக்கப்பட வேண்டும்”

- Advertisement -

இந்தியா இப்போ எதுக்கு கேட்குறாங்க:

“அப்போது கோப்பையை வாங்காத நீங்கள் இப்போது ஏன் அவசரத்துடன் கேட்கிறீர்கள்? உங்களுக்கு வேண்டுமெனில் அலுவலகத்துக்கு சென்று அவருடைய கையால் வாங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் அன்றைய நாளில் நீங்கள் களத்தில் திரைப்படங்கள் (புகைப்படம்) எடுப்பதில் பிஸியாக இருந்தீர்கள். இது விளையாட்டு என்பதால் இங்கே சினிமா விளையாடப்படாது”

இதையும் படிங்க: தனது சகோதரியின் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் இந்திய ஏ அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா – எமோஷனலான அக்கா

“திரைப்படங்களில் தான் காட்சிகள் மீண்டும் எடுக்கப்படும். ஆனால் இங்கே விளையாட்டில் விளையாடும் நீங்கள் மீண்டும் கோப்பை வேண்டும் என்று கேட்கிறீர்கள். நக்வி சொன்னதெல்லாம் சரியானது. இங்கே நாம் கோப்பை பற்றிய பேச்சை பேசக்கூடாது. நக்வி அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அவர் எடுக்கும் நடவடிக்கைகள் பாகிஸ்தானுக்கு சரியானது. அவருக்கு நாம் ஆதரவாக நிற்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement