தனது சகோதரியின் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் இந்திய ஏ அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா – எமோஷனலான அக்கா

Abhishek Sharma Sister
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இளம் துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 2025 ஆசிய கோப்பை தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்கள் குவித்த வீரராக மட்டுமின்றி தொடர் நாயகன் விருதினையும் வென்றிருந்தார். இம்முறை இந்திய அணி ஆசிய கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தினை வென்றதற்கு அபிஷேக் சர்மாவின் பங்களிப்பு மிகப்பெரியது என்றால் அது மிகையல்ல.

சகோதரியின் திருமணத்தை தவிர்த்து இந்திய ஏ அணியில் இணைந்த அபிஷேக் சர்மா :

அந்த அளவிற்கு தனது அற்புதமான அதிரடியான ஆட்டத்தின் மூலம் சிறப்பான துவக்கத்தை அவர் இந்திய அணிக்கு வழங்கியிருந்தார். இந்நிலையில் தற்போது அக்டோபர் 3-ஆம் தேதியான இன்று தனது மூத்த சகோதரியின் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் இந்திய ஏ அணிக்காக அவர் விளையாடியது பலரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய அவருக்கு ஒருநாள் போட்டிகளில் விரைவில் வாய்ப்பு வழங்கப்படும் என்று பேசப்பட்ட வேளையில் அதற்கு தான் தயார் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய ஏ அணியுடன் அவர் இணைந்து விளையாடி வருகிறார்.

அந்தவகையில் இன்று கான்பூர் மைதானத்தில் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக நடைபெற்று வரும் போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய அவர் டக் அவுட்டாகி வெளியேறி உள்ளார். இந்நிலையில் இன்று தனது சகோதரன் இல்லாமலே திருமணம் செய்து கொண்ட அவரது அக்கா கோமல் சர்மா பேசுகையில் :

- Advertisement -

இந்த திருமணம் அற்புதமான ஒன்று. என்னுடைய வாழ்நாளின் மிகச் சிறப்பான நாள் இதுவாக இந்த நாளை கருதுகிறேன். இந்த மகிழ்ச்சியான நிகழ்வில் எனது சகோதரனை மிகவும் தவறவிடுகிறேன் என்று அபிஷேக் ஷர்மாவின் அக்கா கோமல் ஷர்மா எமோஷனலாக பேசியிருந்தார்.

இதையும் படிங்க : முதல் டெஸ்ட் சதத்தை அடித்த பிறகு ராணுவ வீரரான தனது தந்தைக்கு மரியாதை செய்த துருவ் ஜுரேல் – வேறலெவல் சம்பவம்

33 வயதாகும் கோமல் ஷர்மா மாடல் அழகியாக இருப்பதோடு நடிகையாகவும் இருந்து வருகிறார். தமிழிலும் 4 படங்களில் நடித்துள்ள அவர் கடைசியாக விஜய்யின் GOAT படத்தில் நடித்திருந்தார். அவரது திருமணம் இன்று அம்ரிஸ்டாரில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் அபிஷேக் சர்மா பங்கேற்கவில்லை என்றாலும் இதற்கு முந்தைய அனைத்து நிகழ்விலும் அவர் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement