கில்மோரின் 48 வருட சாதனை காலி.. மெக்ராத், ஸ்டார்க்கை முந்திய ஷமி.. வேறு யாரும் செய்யாத.. 5 புதிய உலக சாதனை

Shami Records
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற முதல் செமி ஃபைனலில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 2019 தோல்விக்கு பதிலடி கொடுத்து பழி தீர்த்தது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 398 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இந்தியாவுக்கு அதிகபட்சமாக விராட் கோலி 117, ஸ்ரேயாஸ் 105, கில் 80*, ரோஹித் சர்மா 47, கேஎல் ராகுல் 39* ரன்கள் அடித்தனர். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த நியூசிலாந்து முடிந்தளவுக்கு போராடியும் 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் மட்டுமே எடுத்து இந்த உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது.

- Advertisement -

ஷமியின் சாதனைகள்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக டார்ல் மிட்சேல் சதமடித்து 134, கேப்டன் கேன் வில்லியம்சன் 69 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 7 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் நவம்பர் 19இல் நடைபெறும் மாபெரும் ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்ற இந்தியா ஐசிசி நாக் அவுட் போட்டியில் முதல் முறையாக நியூசிலாந்து வீழ்த்தியது.

இந்த வெற்றிக்கு 9.5 ஓவர்களில் 57 ரன்கள் மட்டும் கொடுத்து 7 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஷமி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். குறிப்பாக 700க்கும் மேற்பட்ட ரன்களை அடிக்கப்பட்ட இப்போட்டியில் 7 விக்கெட்டுகளை அதுவும் செமி ஃபைனலில் அவர் எடுத்துள்ளது உண்மையாகவே மகத்தான விஷயமாகும்.

- Advertisement -

1. சொல்லப்போனால் முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்த அவர் காயமடைந்த பாண்டியாவுக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற அடுத்த 6 போட்டிகளில் 23* விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் இதுவரை 17 உலகக்கோப்பை போட்டிகளில் ஷமி 54* விக்கெட்களை எடுத்துள்ளார். இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல் (இன்னிங்ஸ்):
1. முகமது ஷமி : 17*
2. மிட்சேல் ஸ்டார்க் : 19
3. லசித் மலிங்கா : 25
4. ட்ரண்ட் போல்ட் : 28
5. கிளன் மெக்ராத் : 30

2. அத்துடன் ஐசிசி உலகக்கோப்பை வரலாற்றில் அதிக முறை 5 விக்கெட்களை எடுத்த வீரர் என்ற உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. முகமது ஷமி : 4*
2. மிட்சேல் ஸ்டார்க் : 3

- Advertisement -

3. அதை விட உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் (2023இல்) 3 முறை 5 விக்கெட்டுகளை எடுத்த பவுலர் என்ற மாபெரும் உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் கேரி கில்மோர் (1975இல்), அசந்தா டீ மெல் (1983இல்), வஸ்பர்ட் ட்ரெக்ஸ் (2003இல்), ஷாஹித் அப்ரிடி (2011இல்), முஸ்தபிசுர் ரகுமான் (2019இல்), மிட்சேல் ஸ்டார்க் (2019இல்) ஆகியோர் அதிகபட்சமாக தலா 2 முறை 5 விக்கெட்டுகளை எடுத்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

4. இதுபோக உலகக்கோப்பை வரலாற்றில் நாக் அவுட் போட்டியில் சிறந்த பவுலிங்கை (7/57) பதிவு செய்த வீரர் என்ற உலக சாதனையும் அவர் படைத்தார். இதற்கு முன் 1975 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் கேர் கில்மோர் இங்கிலாந்துக்கு எதிராக 14 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்திருந்ததே முந்தைய சிறந்த பவுலிங்காகும்.

இதையும் படிங்க: இங்க நெறைய ஆடிட்டேன்.. ஆனா ரிலாக்ஸ் எடுக்க விரும்பல.. அரையிறுதி வெற்றிக்கு பின்னர் – ரோஹித் சர்மா அளித்த பேட்டி

5. அத்துடன் உலகக்கோப்பை டி20 உலகக்கோப்பை சாம்பியன்ஸ் டிராபி என அனைத்து விதமான ஐசிசி தொடர்களில் அதிக முறை 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த பவுலர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. முகமது ஷமி : 8*
2. இம்ரான் தாஹிர்/சாகித் அப்ரிடி/மிட்சேல் ஸ்டார்க் : தலா 4

Advertisement