என் தந்தையை இழந்து நான் அழுது கொண்டிருந்த போது கோலி கூறிய இந்த வார்த்தைகளே என்னை பலமாக்கியது – சிராஜ்

Siraj
- Advertisement -

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் தற்போது வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளர்களின் முக்கிய வீரராக பார்க்கப்படுவது மட்டுமின்றி நம்பிக்கை நட்சத்திரமாகவும் மாறி வருகிறார். அதிலும் குறிப்பாக கடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தால் அவதிப்பட்ட நிலையில் இந்திய பவுலிங் யூனிட்டை தலைமை தாங்கி சிறப்பாக வழி நடத்தினார். அவரும் ஆஸ்திரேலிய தொடரின் போது அனுபவம் இல்லாத வீரராக இருந்தும் சிறப்பாக பந்துவீசி இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கை அளித்தார்.

siraj 2

- Advertisement -

டி20 கிரிக்கெட்டில் ஏற்கனவே அறிமுகமாகியிருந்தாலும் கடந்த ஐபிஎல் தொடரின்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிராஜ்க்கு முதன் முறையாக ஆஸ்திரேலிய தொடரின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. விராட் கோலி அவர் மீது பெரும் நம்பிக்கை வைத்து அணியில் இணைத்ததை அவர் வீணாக்கவில்லை. தான் பங்கேற்ற ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக பந்து வீசி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக திகழ்ந்தார்.

அதனை தொடர்ந்து நடைபெற்று முடிந்த இங்கிலாந்து தொடரிலும் தனது அபார பந்து வீச்சை வெளிப்படுத்திய சிராஜ் இந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக மிகவும் கனகச்சிதமாக பந்துவீசியது மட்டுமின்றி அபாயகரமான பவுலராகவும் திகழ்ந்தார். அவருடைய பந்துவீச்சு ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்றதிலிருந்து வேறு லெவவில் உள்ளது என அனைவரும் புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தான் ஆஸ்திரேலிய தொடரின் போது தனது தந்தையை இழந்து அழுது கொண்டிருந்த போது கோலி கூறிய வார்த்தைகளை அவர் வெளியிட்டுள்ளார்.

siraj

இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பொழுது என் தந்தை இறந்த செய்தி எனக்கு கிடைத்தது. அதை கேட்டதும் நான் எனது அறையில் மனமுடைந்து அழுது கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் வந்த கோலி என்னை இறுக கட்டிப்பிடித்து “நான் இருக்கிறேன் நீ எதைப் பற்றியும் கவலைப் படாதே” (I Am With You, Dont Worry) என்று என்னை தேற்றினார். அவர் கொடுத்த அந்த ஊக்கம் என்னை சிறப்பாக செயல்பட வைத்தது.

siraj

மேலும் எனது தந்தைக்காக இந்த தொடரை வெற்றியுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்ற காரணத்தினால் நான் சிறப்பாக பந்து வீசினேன். மேலும் தொடர்ந்து நான் சிறப்பாக பந்து வீசி வருவதற்கு கோலி எனக்கு கொடுக்கும் ஆதரவும் ஊக்கமும் தான் காரணம். என்னுடைய கிரிக்கெட் கரியரில் இப்போது நான் முன்னேற்றங்களை சந்தித்து வருவதற்கும், இனி வரும் காலங்களில் நான் சாதிக்க இருப்பதற்கும் கோலி முக்கிய காரணமாக இருப்பார் என சிராஜ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement