IND vs WI : டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்படி நடப்பது எனக்கு இதுவே முதல்முறை – ஆட்டநாயகன் சிராஜ் மகிழ்ச்சி

Siraj
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது நேற்று நடைபெற்ற ஐந்தாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. அதன்படி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 289 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க தயாராகியது. அதேபோன்று இந்திய அணியும் எஞ்சியுள்ள 8 விக்கெட்டை வீழ்த்தினால் வெற்றி என்ற இலக்குடன் தயாராக இருந்தது. ஆனால் நேற்றைய ஆட்டம் மழை காரணமாக துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

Rain

- Advertisement -

ஆனால் நேரம் செல்ல செல்ல மழை நிற்காமல் பெய்து கொண்டிருந்ததால் நேற்றைய கடைசி ஐந்தாம் நாளன்று ஒரு பந்து கூட வீசப்படாமல் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது டிராவானதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்திய அணி ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால் இந்த தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டு இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டியின் போது மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஏனெனில் முதல் இன்னிங்சின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி நல்ல நிலையில் இருந்தும் நான்காம் நாளில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் 60 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

Siraj-1

அவரது இந்த சிறப்பான பந்துவீச்சின் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய முகமது சிராஜ் கூறுகையில் : டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் ஆட்டநாயகன் விருதினை பெறுவது இதுவே முதல் முறை. இந்த போட்டியில் நான் செயல்பட்டதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

- Advertisement -

பிட்சில் எந்தவித ஹெல்ப்பும் இல்லாத வேளையில் நான் சிறப்பாக பந்து வீசியதில் மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய திட்டத்தை இந்த போட்டியில் மிகவும் சிம்பிளாக வைத்துக் கொண்டேன். அதன்படி லைன் டூ லைன் பந்து வீசினால் நிச்சயம் விக்கெட்டுகள் கிடைக்கும் என்று நினைத்தேன். அந்த வகையில் சிறப்பாக சூழ்நிலைக்கு ஏற்றவாறு பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தியதில் எனக்கு நிறைய நம்பிக்கை கிடைத்துள்ளது.

இதையும் படிங்க : டெஸ்ட் தொடரை வென்றும் சரிவை சந்தித்துள்ள இந்திய அணி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியலில் – இந்தியாவின் நிலை என்ன?

இது போன்ற மைதானத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தினால் நிச்சயம் எங்கும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை கிடைக்கும். ரோகித் சர்மா என் மீது நம்பிக்கை வைத்து என்னை இயல்பாக பந்து சொன்னார். எனவே எந்த ஒரு அழுத்தமும் இன்றி மகிழ்ச்சியாக பந்துவீசியதால் என்னால் சிறப்பாக செயல்பட முடிந்தது என சிராஜ் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement