- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் இருந்து நீக்கப்பட்ட முகமது சிராஜ் – உண்மை காரணம் இதுதான்

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடர் எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி நிறைவடையுள்ள வேளையில் அதற்கடுத்து இந்திய அணியானது அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

டி20 அணியில் இருந்து முகமது சிராஜ் நீக்கப்பட்டது ஏன்? :

இந்த அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் அறிவிக்கப்பட்டு அவரது தலைமையின் கீழ் முழு இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் இந்திய அணியின் நட்சத்திர இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜுக்கு ஆரம்பத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் இந்திய அணி அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே மீண்டும் முகமது சிராஜ் இந்த இரண்டு தொடர்களில் இருந்தும் வெளியேறுகிறார் என்ற தகவல் வெளியாகியது. மேலும் அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா இந்திய அணியுடன் இணைவார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் முகமசி சிராஜ் இப்படி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து நீக்கப்பட என்ன காரணம்? என்று குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான முகமது சிராஜ் கடந்த ஓராண்டாகவே அதிகப்படியான போட்டிகளில் பங்கேற்று விளையாடி இருந்ததாலும், 2026 ஐ.பி.எல் தொடரில் தொடர்ந்து ஓய்வின்றி விளையாடியதாலும் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டே இந்த இரண்டு தொடர்களிலும் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : 147 ரன்கள் மட்டுமே தேவை.. இன்சமாம் உல் ஹக்கை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் – ரோஹித் சர்மா

இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ-யின் மருத்துவக்குழு கொடுத்த ஆலோசனைகளின் படியும், அறிவுரையின் படியுமே முகமது சிராஜ்க்கு இந்த ஓய்வு வழங்கப்படுகிறது என்றும் அதற்கடுத்த முக்கிய டெஸ்ட் தொடர்கள், அடுத்தடுத்த உலகக் கோப்பை தொடர்களில் அவரது தேவை அவசியம் என்பதனாலும் அவருக்கு இந்த ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -