147 ரன்கள் மட்டுமே தேவை.. இன்சமாம் உல் ஹக்கை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் – ரோஹித் சர்மா

Rohit and Inzamam
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர துவக்க ஆட்டக்காரருமான ரோகித் சர்மா தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த தொடரில் முதல் போட்டியில் விளையாடிய அவர் 16 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் என 16 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

இன்சமாம் உல் ஹக்கை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் ரோஹித் சர்மா :

இந்த முதலாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடிய போது இந்திய அணி சார்பாக அதிக வயதில் ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா நிகழ்த்தினார். அதோடு அந்த போட்டியில் 4 ரன்களை அடித்தபோது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரராக எட்டாவது இடத்திலிருந்த ஜாக் காலிஸை பின்னுக்கு தள்ளி அவர் எட்டாவது இடத்தை பிடித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் அவர் மேலும் 147 ரன்களை அடிக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவானான இன்சமாம் உல் ஹக்கின் முக்கிய சாதனையை முறியடிக்கும் வாய்ப்பிற்காக காத்திருக்கிறார். அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் :

இதுவரை இந்திய அணிக்காக 283 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 11,593 ரன்களை குவித்து ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் ஏழாம் இடத்தில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் 11,739 ரன்களுடன் இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : இவரை மாதிரி பவுலர் கிடைப்பது ரொம்ப கஷ்டம்.. ஜஸ்ப்ரீத் பும்ராவை பாராட்டிய – பராஸ் மாம்ப்ரே

அவரது இந்த ரன்களை கடக்க இன்னும் ரோகித் சர்மாவுக்கு 147 ரன்கள் மட்டுமே தேவை. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் அவர் இந்த 147 ரன்களை அடிக்கும் பட்சத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஏழாவது இடத்திற்கு முன்னேறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement