- Advertisement -
ஐ.பி.எல்

7 வருஷம்.. ஜெர்ஸியை மாத்தும் போது கஷ்டமா இருந்துச்சு.. ஆர்சிபி’யை சாய்க்க அவங்க தான் ஹெல்ப் பண்ணாங்க.. சிராஜ் பேட்டி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற்ற 14வது போட்டியில் பெங்களூருவை அதனுடைய சொந்த மண்ணில் 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு தடுமாற்றமாக பேட்டிங் செய்து 170 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக லியாம் லிவிங்ஸ்டன் 54, ஜிதேஷ் சர்மா 33 ரன்கள் எடுத்த நிலையில் குஜராத்துக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்ததாக விளையாடிய குஜராத் நேர்த்தியாக பேட்டிங் செய்து 17.5 ஓவரிலேயே 170-2 ரன்களை எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 49, ஜோஸ் பட்லர் 73*, ரூதர்போர்ட் 30* ரன்கள் எடுத்து வெற்றியில் பங்காற்றினர். அதனால் குஜராத் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

- Advertisement -

சிராஜ் அசத்தல்:

மறுபுறம் பெங்களூரு அணி தங்களது சொந்த மண்ணில் விளையாடிய முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றிக்கு 4 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 7 வருடங்களாக பெங்களூரு அணிக்காக விளையாடிய தாம் தற்போது வேறொரு அணிக்காக விளையாடுவது மனதளவில் கடினமான நிலையைக் கொடுத்ததாக சிராஜ் கூறியுள்ளார்.

இருப்பினும் குஜராத் அணிக்காக பந்தை கையில் எடுத்ததும் தமது முழு திறமையுடன் விளையாடி அசத்தியதாக சிராஜ் தெரிவித்துள்ளார். மேலும் சரியான லைன், லென்த்தில் வீசி பெங்களூருவுக்கு எதிராக அசத்துவதற்கு ஆசிஸ் நெஹ்ரா, இஷாந்த் ஆகிய குஜராத் அணியின் பயிற்சியாளர்கள் உதவியதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

சிராஜ் உருக்கம்:

“நான் கொஞ்சம் உணர்வுப் பூர்வமாக இருந்தேன். பெங்களூரு அணியில் நான் 7 வருடங்கள் இருந்தேன். அதனால் பெங்களூரு அணியின் சிவப்பு ஜெர்சியிலிருந்து குஜராத்தின் நீல ஜெர்சிக்கு மாறும் போது கொஞ்சம் உணர்வுபூர்வமாக இருந்தது. ஆனால் பந்தை கையில் எடுத்ததும் அனைத்தும் சரியானது. நான் ரொனால்டோவின் ரசிகன் என்பதால் அப்படி கொண்டாடுகிறேன்”

இதையும் படிங்க: 44 தோல்விகள்.. சொந்த ஊரில் ஆர்சிபி மோசமான சாதனை.. பட்லர் அதிரடியில் குஜராத் 2வது பெரிய வெற்றி

“தொடர்ச்சியாக விளையாடும் நான் இடைவெளியின் போது எனது தவறுகளைக் திருத்திக்கொண்டு ஃபிட்னெஸில் வேலை செய்தேன். குஜராத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டதும் ஆசிஸ் பாயிடம் பேசினேன். அவர் மகிழ்ச்சியுடன் பௌலிங் செய்யுமாறு என்னிடம் சொன்னார். இஷாந்த் பாய் எந்த லைன், லென்த் ஆகியவற்றில் பௌலிங் செய்ய வேண்டும் என்று என்னிடம் சொன்னார். எனக்கு தன்னம்பிக்கை வேண்டும் என்பதே என்னுடைய மனநிலையாகும். அது சரியாக இருக்கும் பட்சத்தில் பிட்ச் பற்றி கவலையில்லை” என்று கூறினார்.

- Advertisement -