- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தீபக் சாஹரும் இல்ல. ஷமியும் இல்ல. பும்ராவிற்கு பதில் செலக்ட் ஆகப்போறது இவர்தானாம் – பி.சி.சி.ஐ ஸ்கெட்ச்

ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடருக்கு இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில் இந்தத் தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு தற்போது ஆஸ்திரேலியா செல்ல தயாராகி வருகின்றன. அந்த வகையில் 15 வீரர்களை கொண்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இந்த தொடருக்காக முழு வீச்சில் தயாராகி வருகிறது.

இந்நிலையில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த டி20 உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பு தவற விட்டுள்ளார். பும்ராவின் இந்த விலகலை இந்திய அணியின் கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ-யும் தங்களது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தின் மூலம் உறுதியும் செய்துள்ளது.

- Advertisement -

இன்று தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் கடைசி டி20 போட்டிக்கு பின்னர் நாளை மறுதினம் அக்டோபர் 6-ஆம் தேதி ஆஸ்திரேலியா பயணிக்கும் இந்திய அணியுடன் பும்ரா செல்ல மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரது இடத்திற்கு மாற்று வீரராக யாரை இந்திய அணி இணைக்கும் என்பதே அனைவரது கேள்வியாகவும் உள்ளது.

ஏற்கனவே ரிசர்வ் வீரர்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் முகமது ஷமி அல்லது தீபக் சாகர் ஆகிய இருவரில் ஒருவர் பும்ராவின் இடத்திற்கு தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படும் வேளையில் பும்ராவிற்கு பதிலாக முகமது சிராஜ் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி உள்ளார்.

- Advertisement -

எனவே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் நிச்சயம் இந்திய அணிக்கு கை கொடுக்கக் கூடிய பவுலராக இவர் இருப்பார் என்று நம்பப்படுகிறது. அதோடு தற்போதைய டி20 தொடருக்கான இந்திய அணியிலும் பும்ராவிற்கு பதிலாக சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளதால் நிச்சயம் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் பும்ராவிற்கு பதிலாக சிராஜின் பெயர் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : ஒருநாள் கிரிக்கெட்டில் நீண்ட காலம் காத்திருந்து தங்களது முதல் சதத்தை அடித்த 3 இந்திய நட்சத்திரங்களின் பட்டியல்

அப்படி சிராஜ் இடம் பிடித்தாலும் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படுமா? வழங்கப்படாதா? என்ற உறுதியான தகவல் கிடைக்கவில்லை என்றாலும் நிச்சயம் டி20 உலக கோப்பை இந்திய அணியின் பட்டியலில் முகமது சிராஜின் பெயர் பும்ராவிற்கு பதில் சேர்க்கப்படும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -
Published by