- Advertisement -
ஐ.பி.எல்

சி.எஸ்.கே அணியின் தொடர் தோல்விகளுக்கு காரணமே இதுதான்.. கலங்கி நிற்கும் ஸ்டீபன் பிளமிங் – விவரம் இதோ

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சற்று சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது என்று கூறலாம். ஏனெனில் இதுவரை நடைபெற்றுள்ள 8 போட்டிகளில் சென்னை அணி நான்கு வெற்றி மற்றும் நான்கு தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. இதன் காரணமாக சென்னை அணி பிளேஆப் சுற்றுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் இனிவரும் ஆறு போட்டிகளில் சென்னை அணி குறைந்தது 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளேஆப் சுற்றுக்கான வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும். அதேவேளையில் மீதமுள்ள போட்டிகள் அனைத்தும் பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக நடைபெற உள்ளதால் தற்போது சென்னை அணி சிக்கலில் சிக்கியுள்ளது.

- Advertisement -

இருப்பினும் அந்த சவால்களை கடந்து சென்னை அணி நிச்சயம் ப்ளேஆப் சுற்றிற்கு தகுதி பெறும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரின் போது சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய சறுக்களுக்கு காரணம் துவக்க வீரர்களுக்கான ஜோடி மாற்றம் தான் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அந்த வகையில் கடந்த கடந்த சில ஆண்டுகளாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேவான் கான்வே ஆகியோர் சிறப்பான துவக்கத்தை அளித்து வந்ததால் சென்னை அணி வெற்றிப்பாதையில் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு கான்வே காயம் காரணமாக விலகிய வேளையில் ஆரம்பத்தில் ரவீந்திரா மற்றும் ருதுராஜ் ஜோடி இருந்தது. இந்த ஜோடி ஒரு சில போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும் அதன் பின்னர் சரிவை சந்தித்தது.

- Advertisement -

அதன் காரணமாக ருதுராஜ் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். அதோடு துவக்க வீரர்களாக ரஹானே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் விளையாடினர். ஆனால் ஒரு சில போட்டிகளுக்கு பின்னர் ரச்சின் ரவீந்திராவின் ஃபார்மும் மோசமாக ஆனதால் அவர் வெளியேற்றப்பட்டு மீண்டும் ருதுராஜ் மற்றும் ரஹானே ஆகியோரது ஜோடி துவக்க வீரர்களாக விளையாடி வருகிறது.

இதையும் படிங்க : 200 ரன்ஸ்.. ஆர்சிபியை அடித்த தமிழக ஜோடி.. விராட் கோலிக்கு அடுத்த இடத்தை பிடித்து சாய் சுதர்சன் அசத்தல்

இப்படி அடுத்தடுத்து துவக்க வீரர்களுக்கான ஜோடி மாற்றப்பட்டு வருவதே சென்னை அணியின் பின்னடைவுக்கு காரணமாகவும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதுவரை நடைபெற்று முடிந்த 8 போட்டிகளின் முடிவில் சென்னை அணியின் துவக்க வீரர்கள் ஜோடியாக 121 ரன்களை மட்டுமே குவித்துள்ளனர். அதிலும் சராசரி 21-ஆக மட்டுமே இருப்பதினால் சென்னை அணி ஆரம்பத்திலேயே சரிவை சந்தித்திருப்பதை நினைத்து பேட்டிங் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங்கும் சோகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -