- Advertisement -
ஐ.பி.எல்

நியூஸிலாந்திடம் மானத்தை காப்பாற்றிய அப்ரிடி.. 8 வீரர்களை பயன்படுத்தி பாகிஸ்தான் புதிய தனித்துவ சாதனை

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடின. அதில் கேன் வில்லியம்சன் போன்ற முதன்மை வீரர்கள் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதால் மைக்கேல் பிரேஸ்வெல் தலைமையிலான இளம் நியூசிலாந்து அணி களமிறங்கியது. மறுபுறம் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்ட பாபர் அசாம் தலைமையில் முதன்மை பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் விளையாடியது.

அந்த சூழ்நிலையில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில் 2வது போட்டியில் வென்ற பாகிஸ்தானை 3வது போட்டியில் நியூசிலாந்து தோற்கடித்தது. அதே போல 4வது போட்டியிலும் வென்ற நியூசிலாந்து 2 – 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அந்த நிலையில் இத்தொடரில் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி 27ஆம் தேதி லாகூரில் நடைபெற்றது.

- Advertisement -

8 பவுலர்கள்:
அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் போராட்டமாக விளையாடி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 69 (44), பஃகார் ஜமான் 43 (33) ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த நியூசிலாந்து அணிக்கு டாம் பிளன்டல் 4, கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 23, மார்க் சேப்மேன் 12, ஜேம்ஸ் நீசம் 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

அதனால் டிம் சைபர்ட் 52 (33), ஜோஷ் கிளார்க்சன் 38* (26) ரன்கள் அடித்து போராடியும் 19.2 ஓவரில் நியூசிலாந்தை 169 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய பாகிஸ்தான் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் சாகின் அப்ரிடி 4 ஓவரில் 30 ரன்கள் மட்டும் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

அதன் காரணமாக சொந்த மண்ணில் இளம் நியூசிலாந்து அணியிடம் தொடரில் தோல்வியை சந்திக்கும் அவமானத்திலிருந்து தப்பிய பாகிஸ்தான் 2 – 2 (5) என்ற கணக்கில் கோப்பையை பகிர்ந்து கொண்டது. முன்னதாக இந
ப்போட்டியில் பந்து வீச்சில் தெளிவாக செயல்பட முடியாமல் தவித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 20 ஓவர்களை வீசுவதற்காக 8 பவுலர்களை பயன்படுத்தினார்.

இதையும் படிங்க: 10 வருஷமா ஏமாத்தீட்டிங்க.. இப்போவாச்சும் அவருக்கு டி20 உ.கோ சான்ஸ் கொடுங்க.. ஹெடன் கோரிக்கை

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 8 பவுலர்களை பயன்படுத்திய முதல் அணி என்ற தனித்துவமான சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது. மேலும் இப்போட்டியில் பெற்ற வெற்றியையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன் என்ற இயன் மோர்கன், பிரையன் மசாபா (தலா 44 வெற்றிகள்) ஆகியோரின் உலக சாதனையையும் பாபர் அசாம் சமன் செய்தார்.

- Advertisement -