ஜாம்பவான்கள் சமீந்தா வாஸ் சாதனை சமன்.. வக்கார் யூனிஸ், நிடினியை முந்தி இரட்டை சரித்திர சாதனை படைத்த சிராஜ்

Mohammed Siraj Record
- Advertisement -

பரபரப்பாக நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா ஆசிய கண்டத்தின் புதிய சாம்பியனாக சாதனை படைத்துள்ளது. கடந்த 2 வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த அந்த தொடரில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் அசத்திய இலங்கையை அதன் சொந்த மண்ணில் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் எதிர்கொண்ட இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் மிகவும் எளிதான வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

குறிப்பாக கொழும்புவில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அனல் தெறித்த இந்தியாவின் பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் வெறும் 50 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 17 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை சாய்த்தது உட்பட முகமது சிராஜ் மொத்தம் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தார்.

- Advertisement -

சாதனை நாயகன் சிராஜ்:
அதை தொடர்ந்து 51 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவிற்கு இசான் கிசான் 3 பவுண்டரியுடன் 23 (18) ரன்களும் சுப்மன் கில் 6 பவுண்டரியுடன் 27* (19) ரன்களும் எடுத்து 6.1 ஓவரிலேயே 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 6 விக்கெட்கள் எடுத்த முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

1. முன்னதாக இந்த போட்டியில் நிசாங்கா, அசலங்கா, சமரவிக்கிரமா, டீ சில்வா ஆகிய 4 பேட்ஸ்மேன்களை ஒரே ஓவரில் அவுட்டாக்கிய முகமது சிராஜ் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டையும் சேர்த்து ஒரு ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பவுலர் என்ற மாபெரும் சரித்திரம் படைத்தார்.

- Advertisement -

2. அத்துடன் கேப்டன் சனாக்காவையும் வீழ்த்திய அவர் தன்னுடைய முதல் 16 பந்துகளில் மொத்தம் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிவேகமாக 5 விக்கெட்டுகளை எடுத்த பவுலர் என்ற உலக சாதனையை முகமது சிராஜ் சமன் செய்துள்ளார். இதற்கு முன் கடந்த 2003இல் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வாஸ் 16 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

3. அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக ஒரு போட்டியில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த வீரர் என்ற பாகிஸ்தான் ஜாம்பவான் வக்கார் யூனிஸ் சாதனையும் அவர் உடைத்த புதிய சரித்திர படைத்தார். அந்த பட்டியல்:
1. முகமது சிராஜ் : 6/21, 2023*
2. வக்கார் யூனிஸ் : 6/26, 1990

இதையும் படிங்க: இன்னைக்கு நான் இவ்ளோ நல்லா பவுலிங் பண்றேனா. அதுக்கெல்லாம் அவர்தான் காரணம் – தொடர்நாயகன் குல்தீப் யாதவ் பேட்டி

4. அது போக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் பவர் பிளே ஓவர்களில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த வீரர் என்ற புதிய சாதனையும் முகமது சிராஜ் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. முகமது சிராஜ் : 5/7, இலங்கைக்கு எதிராக
2. மகாயா நிட்டினி : 5/8, பாகிஸ்தானுக்கு எதிராக

Advertisement