- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அந்த கேட்சை பிடிச்சிருந்தா இந்தியா டாப்ல இருந்திருக்கும்.. பிரசித் கிருஷ்ணாவிடம் மன்னிப்பு கேட்ட – முகமது சிராஜ்

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. ஏனெனில் இந்த போட்டியில் 374 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை கடைசி இன்னிங்சில் துரத்தி விளையாடி வரும் இங்கிலாந்து அணியானது நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் குவித்துள்ளது.

பிரசித் கிருஷ்ணாவிடம் மன்னிப்பு கேட்ட சிராஜ் :

இதன் காரணமாக ஐந்தாம் நாளான இன்று இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவை என்கிற நிலையுள்ளது. அதேவேளையில் இந்திய அணி எஞ்சியுள்ள நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்த போட்டியில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இந்த போட்டியானது தற்போது சுவாரசியத்தை எகிற வைத்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் போட்டியின் நான்காம் நாளான நேற்று இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் சக அணி வீரரான பிரசித் கிருஷ்ணாவிடம் மைதானத்தில் மன்னிப்பு கேட்ட ஒரு சம்பவம் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தது.

அந்த வகையில் இந்த போட்டியின் போது இரண்டாவது இன்னிங்ஸில் 35 வது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசுகையில் 19 ரன்களுடன் விளையாடி கொண்டிருந்த ஹாரி புரூக் கொடுத்த எளிய கேட்சை கட்சிதமாக பிடித்தார். இருப்பினும் தவறுதலாக பவுண்டரி ரோப்பை மெரித்த முகமது சிராஜ் அதை சிக்ஸராகவும் மாற்றினார்.

- Advertisement -

அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ஹாரி புரூக் 98 பந்துகளில் 14 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் என 111 ரன்கள் குவித்து அந்த அணியை வலுவான நிலைக்கு அழைத்துச் சென்றார். ஒருவேளை அந்த கேட்சை முகமது சிராஜ் சரியாக பிடித்திருந்தால் இந்நேரம் ஆட்டம் இந்தியாவின் வசம் இருந்திருக்கும். தான் செய்த அந்த தவறை ஏற்றுக்கொள்ள முடியாத சிராஜ் வருந்திய படி பவுண்டரி லைனில் சில நிமிடங்கள் நின்றார்.

இதையும் படிங்க : இந்திய அணிக்கு எதிராக ஸ்டீவ் ஸ்மித் நிகழ்த்திய மாபெரும் சாதனையை சமன் செய்த ஜோ ரூட் – விவரம் இதோ

பின்னர் தன்னுடைய தவறை நினைத்து அந்த ஓவர் முடிந்ததும் பிரசித் கிருஷ்ணாவிடம் சென்று மன்னிப்பு கேட்டார். அதனை ஏற்றுக்கொண்ட பிரசித் கிருஷ்ணாவும் ஆட்டத்தில் இது போன்ற நடப்பதெல்லாம் சகஜம் என அவரை கட்டித்தழுவி ஆசுவாசப்படுத்தினார். இந்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பெரியளவு கவனத்தை ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -