- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணிக்கு விழுந்துள்ள அடி மேல் அடி.. பும்ராவை தொடர்ந்து சிராஜுக்கும் பிரச்சனை – இதை கவனிச்சீங்களா?

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் ஏற்கனவே ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் பின்தங்கியுள்ள இந்த அணியானது நடைபெற்று வரும் நான்காவது போட்டியிலும் தோல்வியை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை இந்த போட்டியிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்தால் மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் இங்கிலாந்து அணி இந்த தொடரை கைப்பற்றி விடும்.

முகமது சிராஜுக்கு ஏற்பட்டுள்ள காயம் :

கடந்த ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்கி நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 358 ரன்களை மட்டுமே குவித்தது. ஆனால் அதனை தொடர்ந்து தற்போது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இங்கிலாந்து அணியானது :

- Advertisement -

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 544 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியுள்ளது. இதன் காரணமாக தற்போது 186 ரன்கள் முன்னிலையில் நான்காம் நாள் ஆட்டத்தில் விளையாட இருக்கும் இங்கிலாந்து அணி மேலும் ரன்களை குவிக்கும் பட்சத்தில் இந்திய அணி இந்த போட்டியிலும் தோல்வியை நோக்கி செல்ல அதிக வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாகவே பல்வேறு இந்திய வீரர்கள் காயத்தால் அவதிப்பட்ட வேளையில் இந்திய அணிக்கு மேலும் அடி மேல் அடி விழும் வகையில் ஜஸ்ப்ரீத் ப்ரீத் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் காயத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய போட்டியின் போது பும்ரா அடிக்கடி ஓய்வறைக்கு சென்று முதலுதவி எடுத்துக் கொண்டார். அதுமட்டும் இன்றி அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் தாங்கி தாங்கி நடப்பதையும் பார்க்க முடிந்தது.

- Advertisement -

அதேபோன்று பும்ராவை தொடர்ந்து தற்போது முகமது சிராஜுக்கும் கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏனெனில் எப்போதுமே களத்தில் முழு உத்வேகத்துடன் பந்துவீசும் முகமது சிராஜ் நேற்றைய போட்டியில் அவரது 22-வது ஓவருக்கு பின்னர் தனது வேகத்தை குறைத்து வீசினார். அதுமட்டும் இன்றி அவரும் பவுண்டரி லைனில் பீல்டிங் செய்கையில் கணுக்காலில் ஏற்பட்ட அசவுகரியத்தின் காரணமாக தாங்கி தாங்கி நடந்தார்.

இதையும் படிங்க : பும்ரா இருந்தும் இந்தியா 500 ரன்ஸ் வாரி வழங்க இதான் 2 காரணம்.. அதுல கொஞ்சம் எனர்ஜி போடனும்.. மோர்கெல் பேட்டி

அதோடு அவரும் பும்ராவை போன்று அடிக்கடி ஓய்வறைக்கு சென்று முதலுதவி எடுத்துக் கொண்டார். இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இதுவரை 135 ஓவர்களை வீசியுள்ள அவர் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ள வேளையில் அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் இந்திய அணி பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -