
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட வேலையில் இரண்டாவது போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
ஏனெனில் அண்மையில் அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 தொடரை இழந்த இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை கைப்பற்ற வேண்டிய முனைப்புடன் விளையாடி வருகிறது. இந்த இங்கிலாந்து தொடரில் வைபவ் சூர்யவன்ஷியை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
ஏனெனில் கடந்த சில போட்டிகளாக தொடர்ந்து சொதப்பி வரும் சஞ்சு சாம்சனை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக சூரியவன்ஷியை விளையாட வைக்க வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த ஒரு தவறை மட்டும் செய்து செய்யக்கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான சத்தீஸ்வர் புஜாரா பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணி சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும். ஏனெனில் அவர் எந்த ஒரு அழுத்தத்தையும் உணராமல் விளையாடும் சூழலை அவருக்கு நீங்கள் வழங்க வேண்டும். டி20 உலக கோப்பை தொடரில் அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது திறமைக்கு நிச்சயம் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும்.
இதையும் படிங்க : கே.எல் ராகுலின் சாதனையை தகர்த்து இங்கிலாந்து மண்ணில் அசத்திய அபிஷேக் சர்மா – விவரம் இதோ
ஒருவேளை நீங்கள் வைபவ் சூர்யவன்ஷியை விளையாட வைக்க வேண்டும் என்று நினைத்தால் அதில் தவறு எதுவும் கிடையாது. அதேவேளையில் அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகிய மூவரையும் நீக்கவும் கூடாது. யாரேனும் ஒருவருக்கு ஓய்வளித்து விட்டு சூர்யவன்ஷியை விளையாட வைக்கலாம் என புஜாரா கூறியது குறிப்பிடத்தக்கது.