உ.கோ ஃபைனலுக்கு பின் அந்த ஆஸி வீரர் அப்படி செஞ்சதை பார்த்தது வலிக்குது.. ஷமி ஆதங்க பேட்டி

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியாவை தோற்கடித்த பட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா தங்களுடைய 6வது கோபையை வென்றது. குறிப்பாக சொந்த மண்ணில் லீக் சுற்றில் ஆஸ்திரேலியா உட்பட அனைத்து அணிகளையும் தோற்கடித்த இந்தியா செமி ஃபைனலில் வலுவான நியூசிலாந்தை வீழ்த்தி உச்சகட்ட ஃபார்மில் எதிரணிகளை அடித்து நொறுக்கி வந்தது.

ஆனாலும் மாபெரும் இறுதிப்போட்டியில் அகமதாபாத் நகரில் பேட்டிங்கில் சுமாராக விளையாடிய இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதனால் சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை தவற விட்ட இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் தோல்வியை சந்தித்தது கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

- Advertisement -

ஷமி ஆதங்கம்:
மறுபுறம் ஆரம்பத்தில் தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தாலும் அதன் பின் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா நாக் அவுட் சுற்றில் அபாரமாக செயல்பட்டு உலகின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. அதை விட அதற்காக கொடுக்கப்பட்ட வெற்றி கோப்பை மீது நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர் மிட்சேல் மார்ஷ் கால் மேல் கால் போட்டு கொண்டாடியது பெரிய சர்ச்சையாக அமைந்தது.

ஏனெனில் இந்தியா, தென்னாப்பிரிக்கா போன்ற பல அணிகளின் வீரர்களும் ரசிகர்களும் அந்த கோப்பையை வென்று தெய்வமாகக் கொண்டாடுவதற்கு காத்திருக்கிறார்கள். அந்த சூழ்நிலையில் முழுமையான திறமையை வெளிப்படுத்தி கடினமாக உழைத்ததற்கு கிடைத்த பரிசு மீது இப்படி அவர் கால் மீது கால் போட்டது பல ரசிகர்களை திருப்தியடைய வைத்தது.

- Advertisement -

பொதுவாக செய்யும் தொழிலே தெய்வம் என்று சொல்வார்கள். அந்த வகையில் ஆஸ்திரேலியா உட்பட எந்த நாட்டைச் சேர்ந்த வீரர்களாக இருந்தாலும் அவர்களின் கலாச்சாரம் எதுவாக இருந்தாலும் கிரிக்கெட் எனும் தொழிலில் கடினமாக உழைத்து அதுவும் நாட்டுக்காக கிடைத்த பரிசு மீது மார்ஷ் கால் போட்டு கொண்டாடியதை பல ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில் மார்ஷ் அப்படி செய்ததை பார்த்தது தமக்கு வலியை கொடுத்ததாக இந்திய வீரர் முகமது ஷமி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: இன்னிக்கு ரிங்கு சிங் இப்படி ஆடுவதற்கு அவர் தான் காரணம்.. முன்னாள் இந்திய வீரரை பாராட்டிய டிகே

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அது வலிக்கிறது. அந்த கோப்பைக்காக தான் உலகின் அனைத்து அணிகளும் போராடுகின்றன. அப்பப்டிப்பட்ட வெற்றி கோப்பையை நீங்கள் உங்களுடைய தலையில் வைத்து கொண்டாட வேண்டும். மாறாக இப்படி கோப்பை மீது கால் வைப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை” என்று கூறினார். இதைத்தொடர்ந்து சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement